சிங்கப்பூரில் யீஷுன் வட்டாரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் பரவிய தீயின் காரணமாக காவல்துறை அதிகாரிகள் சிலர் உட்பட தற்போது 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிளாக் 141 யீஷுன் ரிங் ரோட்டில் நிகழ்ந்த இந்த தீ விபத்து குறித்து காலை 8.30மணி அளவில் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக குடிமை தற்காப்பு குழுவை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மளமளவென எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்க அதிகாரிகள் போராடினர். அடுக்குமாடி கட்டிடத்தின் 3, 4 ஐந்தாம் மாடியில் உள்ள அறைகளில் தீ பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கரும் புகை சூழ்ந்து வீட்டில் உள்ள மற்ற எல்லா அறைகளுக்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்த பிளாக்கில் இரண்டாவது மாடி முதல் 10 மணி வரை வசிக்கும் அனைத்து குடியிருப்பு வாசிகளும் (சுமார் 100 பேரும்) தாமாகவே கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் புகையால் சுவாசக் கோளாறு ஏற்பட்ட காவல் அதிகாரிகள் உள்பட 10 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகின்றது.