நேற்று ஜனவரி 14ம் தேதி சிங்கப்பூர் 366 புக்கிட் பாடோக் தெரு 31ல் மதியம் 2.40 மணியளவில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக SCDFக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள 4வது மாடியில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் தீ பற்றியது. இதையும் படியுங்கள் : பிப்ரவரி 1, முழுமையாக தடுப்பூசி போடலனா “நீங்க” கார் ஓட்ட முடியாது – செக் வைத்த சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சகம்
புக்கிட் பாடோக் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக அந்த எரிந்துகொண்டிருந்த அறைக்குள் நுழைந்து தண்ணீர் ஜெட் மூலம் தீயை அணைத்தனர். தீ விபத்தால், படுக்கையறை வெப்பம் மற்றும் புகை சேதத்தால் பாதிக்கப்பட்டது என்று SCDF தெரிவித்தது. மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும் தற்போது தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
SCDFன் வருகைக்கு முன்னர் ஒரு பொது உறுப்பினர் தண்ணீர் குழாய் மூலம் தீயை தணித்ததை நாங்கள் அறிவோம். அவசரகாலச் சூழலை நிர்வகிப்பதில் விரைவான சிந்தனை மற்றும் உடனடி நடவடிக்கைக்காக SCDF அந்த நபரைப் பாராட்டுகிறது என்றும் குடிமை தற்காப்பு படையினர் வெளியிட்ட அந்த பதிவில் தெரிவித்தனர்.