TamilSaaga

சிங்கப்பூரில் தொழிற்சாலை செயல்பாடுகள் வளர்ச்சி – SIPMM தகவல்

செப்டம்பரில் சிங்கப்பூரின் தொழிற்சாலை செயல்பாடு தொடர்ச்சியாக 15 வது மாதமாக விரிவடைந்துள்ளது ஆனால் முந்தைய மாதத்தை விட மெதுவான விகிதத்தில் அது விரிவடைகிறது.

சிங்கப்பூர் கொள்முதல் மற்றும் பொருட்கள் மேலாண்மை நிறுவனம் (SIPMM) நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 4) வெளியிட்ட தகவல்களின்படி, செப்டம்பரில் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (PMI) 50.9 இலிருந்து 50.8 ஆகக் குறைந்தது.

பிஎம்ஐ 50 க்கு மேல் இருப்பது உற்பத்தி பொருளாதாரம் பொதுவாக விரிவடைகிறது என்பதைக் குறிக்கிறது, அதற்குக் கீழே உள்ள எண்ணிக்கை குறைவதை சுட்டிக்காட்டுகிறது.

“எலக்ட்ரானிக்ஸ் அல்லாத துறையில் வளர்ச்சி குறைந்துபோன போதிலும், ஒட்டுமொத்த உற்பத்தித் துறை இப்போது 15 மாதங்கள் தொடர்ச்சியான விரிவாக்கத்தை பதிவு செய்துள்ளது” என்று SIPMM தெரிவித்துள்ளது.

புதிய பிஎம்ஐ வாசிப்பு, புதிய ஆர்டர்கள், புதிய ஏற்றுமதி, தொழிற்சாலை வெளியீடு, சரக்கு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் முக்கிய குறியீடுகளில் மெதுவான விரிவாக்க விகிதங்கள் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முடிக்கப்பட்ட பொருட்கள், உள்ளீட்டு விலைகள் மற்றும் சப்ளையர் விநியோகங்களின் குறியீடுகள் வேகமான விகிதத்தில் விரிவடைவதாகவும் அதே நேரத்தில் இறக்குமதி மற்றும் ஆர்டர் பேக்லாக் ஆகிய இரண்டின் குறியீடுகள் மெதுவாக விரிவடைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

51.7 இல் உள்ள உள்ளீட்டு விலைக் குறியீடு, 51.8 ஆக கடந்த 2017ல் இருந்த குறியீட்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த மதிப்பு தற்போதைய மதிப்பு என SIPMM தெரிவித்துள்ளது.

Related posts