TamilSaaga

சிங்கப்பூர் MRTயில் ஸ்கேட்போர்டிங் செய்த நபர் – கீழே தள்ளிவிட்ட நிலைய அதிகாரி சஸ்பெண்ட்

சிங்கப்பூரில் Esplanade MRT நிலையத்தில் ஸ்கேட்போர்டில் சவாரி செய்த நபரை ஒருவர் தள்ளும் வீடியோ வெளியானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எஸ்எம்ஆர்டி நிலைய ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளது அந்த MRT நிறுவனம். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) இரவு 10.25 மணியளவில் நடந்தது என்று டிரான்ஸ்ப்காம் காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்கு உதவும் வகையில் போக்குவரத்து ஆபரேட்டர் பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

ஸ்டேஷன் ஊழியர் ஒருவர் ஸ்டேஷனுக்குள் ஒருவர் ஸ்கேட்போர்டிங் செய்வதைக் கண்டார். மற்றும் சக பயணிகளின் பாதுகாப்பிற்காக ஸ்கேட்போர்டிங் நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரிடம் அந்த அதிகாரி கூறியுள்ளார் என்று எஸ்எம்ஆர்டி சனிக்கிழமை தனது பதிவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தன்று அந்த நபர் மற்ற பயணிகளும் பயன்படுத்தும் படிக்கட்டுகளை நோக்கி ஸ்கேட்போர்டிங் செல்வதை ஊழியர்கள் பார்த்தபோது, ​​அவர் அவ்வாறு செய்வதை தடுக்க ஊழியர்கள் அந்த நபரை நோக்கி விரைந்துள்ளனர். வெளியான காணொளியில் சிவப்பு ஜாக்கெட் அணிந்த அந்த ஊழியர் ஸ்கேட்டிங் செய்த அந்த நபர் தள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் எங்கள் ஊழியர் வரம்பை மீறி செயல்பட்டுள்ளார், அதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவர் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது SMRT நிலையம்.

Related posts