TamilSaaga

தைவானுக்கு விரைவில் எல்லைகளை தளர்வுபடுத்தும் சிங்கப்பூர் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

சிங்கப்பூருக்கு தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கு PCR சோதனை மேற்கொண்டு அந்த சோதனையில் நெகடிவ் வரும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்துதல் இல்லாமல் சிங்கப்பூருக்குள் அனுமதிக்க வாய்ப்புகள் உண்டு என்று தற்போது சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தைவானில் பெருந்தொற்று சூழல் சீரடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கு அவர்களின் வருகையின்போது கட்டாய PCR சோதனை நடைபெறுகின்றது. மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்தபிறகும் ஒரு PCR சொத்தை மேகொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 21 நாட்களுக்கு முன் தைவானுக்கு பயண வரலாற்றைக் கொண்ட குறுகிய கால பாஸ் வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 12 அல்லது அதற்குப் பிறகு சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏர் டிராவல் பாஸுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் சனிக்கிழமையன்று இரவு 11.59 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் தங்களுடைய 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை செயல்படுத்தி வரும் பயணிகள் தங்கள் தங்குமிட அறிவிப்பை பூர்த்தி செய்து வெளியேற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts