உலகம் முழுதும் கொரோனா தாக்கத்தால் வேலையிழப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கடந்த ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு சதவீதம் சரிந்த வண்ணமே இருந்த சிங்கப்பூரில் கடந்த காலாண்டில் மட்டும் முதன்முறையாக அது உயர்ந்துள்ளது.
கடந்த காலாண்டில் மட்டுமே சுமார் 12,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கபெற்றுள்ளன.
முந்தைய காலாண்டுகளில் கொரோனா தாக்கத்தால் ஏறத்தாழ 5000 பேர் பணியை இழந்த சூழலில் இருந்து தற்போது கடந்த காலாண்டில் அது 2000 பணியிழப்பு என்ற வகையில் குறைந்துள்ளது.
இதுவரை சுமார் 68,000 வேலைவாய்ப்புகள் புதிதாக வழங்கிட பல நிறுவனங்களும் முன்வந்து, பணியமர்த்திய நிலையில் கடந்த காலாண்டில் மட்டும் வேலையின்மை 4 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக சேவை துறை, சுகாதாரத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் மக்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருக்கும் மக்கள் மத்தியில் இது சிறிது நம்பிக்கையூட்டும் முன்னேற்றமாக காணப்படுகிறது.