TamilSaaga

எச்சரிக்கை! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) பெயரில் போலியான மின்னஞ்சல்

சிங்கப்பூர் மனிதவள அமைச்சு (MOM) பெயரில் போலியான இ-மெயில் (MOM_Auto_Acknowledgement @ mom. gov. sg) மூலம் லிங்க் ஒன்றை அனுப்பி அதனை க்ளிக் செய்து இணைப்பை பதிவிறக்கம் செய்யுமாறு பொதுமக்களுக்கு மெயில்கள் அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சந்தேகத்துக்கு இடமளிக்க கூடிய மெயில்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் இந்த மெயில்களுக்கு பதிலளிக்கவோ அதில் உள்ள இணைப்பை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என்று மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்ற போலி மெயில்களால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல்துறையில் இதனை அறிவிக்க வேண்டும் அல்லது ஊழல் தடுப்பு பிரிவில் 1800 722 6688 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளது.

மேலும் அமைச்சகம் இதனை தொடர்ந்து கண்காணித்து இது போன்ற குற்றங்களை தடுக்கவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தவும் செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

Related posts