TamilSaaga

‘இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க’ – சிங்கப்பூரில் நூதன திருட்டில் ஈடுபட்ட ஊழியருக்கு சிறை தண்டனை

சிங்கப்பூரில் தான் பணிபுரியும் நிறுவனத்தின் பிரிண்டர் சாதனத்தை தனது சொந்த பதிப்பு நிறுவனத்திற்காக பயன்படுத்தி சுமார் 57 ஆயிரம் வெள்ளி இலாபம் ஈட்டிய ஊழியருக்கு தற்போது ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் கூடுதலாக சுமத்தப்பட்டுள்ளது.

8 Ink மீடியா என்ற பதிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர்தான் 56 வயதான மைக் சாங். இவர் தான் செய்த நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை தற்போது மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2015, 16, 17 மற்றும் 18 ஆகிய ஆண்டுகளில் சுமார் 70 முறைக்கும் மேலாக தான் பணி செய்து வந்த நிறுவனத்தின் பிரிண்டர் சாதனங்களை பயன்படுத்தி தனது சொந்த நிறுவனத்திற்கு 57 ஆயிரத்து மேலும் வருமானம் ஈட்டியுள்ளார்.

குற்றம் நிரூபணமான பட்சத்தில் 58,000 வெள்ளியை அந்த நிறுவனத்திற்கு தவணைமுறையில் செலுத்துவதாக சாங் ஒப்புக்கொண்டார். மேலும் அதை கடந்த ஜூன் மாதம் முழுமையாக செலுத்தியும் முடித்துள்ள நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை வழங்கவும் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே தனது சொந்த நிறுவனத்திற்கு பல ஆயிரம் வெள்ளி சேர்த்த இந்த சம்வபம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts