TamilSaaga

2025: சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் சாதிப்பதற்கான “TOP 5” சிறந்த படிப்புகள்.

சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் சாதிக்க தேவையான பயிற்சிகள்: முழுமையான வழிகாட்டி

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் கட்டுமான மற்றும் கப்பல் துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. இத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், பாதுகாப்பான சூழலில் பணிபுரியவும் சிங்கப்பூர் அரசு பல்வேறு பயிற்சி வகுப்புகளை கட்டாயமாக்கியுள்ளது. இந்த பயிற்சிகள், முதல் முறையாக சிங்கப்பூர் வருபவர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவசியமானவை.

I. அடிப்படை அறிமுகப் பயிற்சிகள்:

 

சிங்கப்பூருக்கு புதிதாக வரும் அல்லது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், இங்குள்ள பொதுவான விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த அறிவுரைகளைப் பெறும் பயிற்சி வகுப்பை முடித்தாக வேண்டும். இது சிங்கப்பூரின் விதிமுறைகள், தொழிலாளர் உரிமைகள், கடமைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றிய அடிப்படை புரிதலை வழங்குகிறது.

II. வேலை தொடர்பான திறன் சோதனைகள் (Skill Tests):

பணி அனுமதி (Work Permit) பெற்று சிங்கப்பூர் வரும் தொழிலாளர்கள், முறையாக பணியமர்த்தப்படுவதற்கு முன்னர் திறன் சோதனைகளை முடிக்க வேண்டும். இதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:

  1. Basic Skill Test (அடிப்படை திறன் சோதனை):
    • இது கட்டுமானத் துறையில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களின் அடிப்படை திறன்கள் மற்றும் அறிவை மதிப்பிடுவதற்கான ஒரு முறையாகும்.
    • கட்டுமானத் தளத்தில் பாதுகாப்பாகவும், திறமையாகவும் பணிபுரியத் தகுதியானவரா என்பதை இந்தத் தேர்வு தீர்மானிக்க உதவுகிறது.
    • இந்த திறன் பயிற்சி வகுப்பை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் மற்றும் 2 மாதங்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
    • இந்த சோதனையை முடிப்பதற்காக வழங்கப்படும் “Pre-approval” (தற்காலிக அனுமதி) இரண்டு மாதங்கள் வரை செல்லுபடியாகும்.
  2. High Skill Test (உயர்ந்த திறன் சோதனை):
  • இந்தச் சோதனை, அடிப்படைத் திறன்களைத் தாண்டி, குறிப்பிட்ட பணிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கானது.
  • இது விண்ணப்பதாரர்களின் அனுபவம் மற்றும் தொழில் சார்ந்த நுணுக்கங்களை மதிப்பிடுகிறது.

III. கட்டாயப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்புகள்:

 

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) வழிகாட்டுதலின்படி, கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளரும் குறிப்பிட்ட பாதுகாப்புப் பயிற்சிச் சான்றிதழ்களைப் பெற்றிருப்பது கட்டாயம். அவற்றில் சில முக்கியமானவை:

  1. Construction Safety Orientation Course (CSOC) – கட்டுமான பாதுகாப்பு அறிமுகப் பயிற்சி:
    • கால அளவு: 8 மணி நேரம்.
    • யார் பெறலாம்? ஏற்கனவே கட்டுமானத் துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்), தங்களுடைய CSOC அல்லது ACS சான்றிதழ்களைப் புதுப்பிக்க வேண்டியவர்கள்.
    • முக்கியத்துவம்: கட்டுமானத் துறையில் தொடர்ந்து ஈடுபட விரும்பினால் இந்தச் சான்றிதழ் அவசியம். இது ஒரு மறு சான்றிதழ் பெறும் பயிற்சியாகும். இதை முடித்த பின்னரே நீங்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட முடியும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

  1. Apply Workplace Safety & Health in Construction Sites (ACS) – கட்டுமானத் தளங்களில் பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பயன்படுத்துதல்:
    • கால அளவு: சுமார் 18 மணி நேரம்.
    • யார் பெறலாம்? கட்டுமானத் தொழிலில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என அனைவரும் பெற்றிருக்க வேண்டும்.
    • முக்கியத்துவம்: இந்த பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளியும் வேலை பாதுகாப்பில் போதுமான பயிற்சி பெற்றவராகக் கருதப்படுவர். பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • பயன்கள்: இந்தப் பயிற்சியில் தொழிலாளர்கள் தங்களுடைய தொழில் சார்ந்த பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திறன் மேம்படுத்துதல், மேலும் கட்டுமானத் தொழிலாளியாகத் தங்களுடைய பொறுப்புகள் பற்றி அறிந்துகொள்ளலாம். பணியிட மாதிரிகளைக் கொண்டு பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். ஆபத்துக் காலங்களில் அலாரங்களை இயக்கவும் பயிற்சி அளிக்கப்படும். இத்தகைய பயிற்சி பெறுவதன் மூலம், பாதுகாப்பாக பணியிடத்தில் வேலை செய்ய முடியும். எதிர்பாராத விபத்துகளையும் சமாளிக்கும் திறன்களைப் பெற முடியும்.
  2. Perform Work At Height (PWAH) – உயரத்தில் பணிபுரிதல்:
    • யார் பெறலாம்? பொதுவாக உயரத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள். இன்றைய காலகட்டத்தில் கட்டுமானத் துறையில் அதிகபட்சம் உயரமான கட்டிடங்கள் கட்டப்படுவதால், இது போன்ற இடங்களில் வேலை செய்பவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
    • பயன்கள்: இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உயரத்தில் பணிபுரியும் அபாயங்களை கற்பிப்பதோடு, அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் கற்பிக்கப்படும். தடுப்பு அமைப்புகள் மற்றும் உயர் கட்டுமான உபகரணங்களைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களிலும் பயிற்சி பெறுவர்.
  3. Perform Metal Scaffold Erection (PMSE) – உலோகச் சாரக்கட்டு அமைத்தல்:
    • கால அளவு: சுமார் 38 மணி நேரம்.
    • முக்கியத்துவம்: WSH 2006 Act-ன் படி, கட்டுமானத்துறையில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களும் இந்த பயிற்சி வகுப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    • பயன்கள்: இந்தப் பயிற்சியின் மூலம் உலோகச் சாரக்கட்டுகளை எப்படி கட்டமைப்பது மற்றும் வேலை முடிந்த பின் அதை எவ்வாறு பிரித்தெடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம். நிறுவனங்கள் PMSE பயிற்சி பெற்றவரை மட்டுமே இந்த சாரக்கட்டு வேலைகளுக்குப் பயன்படுத்த முடியும்.
  4. Perform Work in Confined Space Operation (PWCSO) – வரையறுக்கப்பட்ட இடத்தில் பணிபுரிதல்:
    • கால அளவு: 14 மணி நேரம்.
    • யார் பெறலாம்? உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பெற வேண்டிய பயிற்சி. குறிப்பாக தொட்டிகள், குழாய்கள், சுரங்கங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் போன்ற வரையறுக்கப்பட்ட இடங்களில் வேலை செய்பவர்களுக்கானது.
    • முக்கியத்துவம்: இது போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஆபத்துகள் அதிகம் வரலாம், எனவே இதற்கென தனி பயிற்சி பெற்ற பின்னரே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
    • பயன்கள்: வரையறுக்கப்பட்ட இடங்களில் வேலை செய்வது, அவசரகாலங்களில் சரியாகச் செயல்படுவது, வரையறுக்கப்பட்ட இடங்களில் தேவைப்படும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்படும்.

 

IV. கூடுதல் பயிற்சிகள் மற்றும் சான்றிதழ் அங்கீகாரம்:

 

மேலே குறிப்பிட்ட பயிற்சிகள் தவிர, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக மேலும் பல பயிற்சிகளை உருவாக்கியுள்ளது. நீங்கள் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது பணிபுரிய விரும்புகிறீர்கள் என்றால், இது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு அதற்குரிய சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: இந்த பயிற்சிகளை MOM அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலேயே பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்களுக்கே சிங்கப்பூரில் மதிப்பு அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணங்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடலாம். உங்களுக்குத் தகுந்த மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சிகளைப் பெற்று, தகுதியுள்ள தொழிலாளராகச் சிங்கப்பூரில் பணிபுரியலாம்.

2025-ல் சிங்கப்பூரின் கட்டுமானத் துறை நிறுவனங்கள் எவ்வாறு பணியாளர்களை தேர்வு செய்கிறது?

Related posts