TamilSaaga

இந்த மாதம் முதல் ஏறப்போகும் பில்! விவரம் தெரிஞ்சுக்கோங்க மக்களே!

சிங்கப்பூரில் SP-Group மூலம் மின்சார இணைப்பு பெற்றுள்ள அனைவருக்கும் இது முக்கியமான செய்தி! ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கு 0.3 சதவிகிதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி நான்கு அறைகள் கொண்ட HDB பிளாட்-க்கு 0.35 SGD உயர்த்தப்பட்டு S$118.03-ஆக இருந்த கட்டணம் S$118.38-ஆக மாறியுள்ளது. (GST கட்டணம் சேர்க்காமல்)

மின்சார உற்பத்திக் கட்டணம் உயர்ந்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கடந்த 28-ம் தேதி நடந்த செய்தி வெளியீட்டில் SP-Group தெரிவித்துள்ளது. 

வீட்டிற்கு அளிக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையிலான காலாண்டிற்கு S$29.79 டாலராக இருந்தது. மேலும் ஜனவரி முதல் மார்ச் வரை நடப்பு காலாண்டை விட சற்று அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஜனவரி முதல் மார்ச் வரை S$29.89 ஆக இருந்தது. (மேற்கண்ட கட்டணங்கள் எதுவும் GST-ஐ உள்ளடக்கவில்லை).

மேலும் விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்து அறிந்துகொள்ளவும்!

https://www.spgroup.com.sg/our-services/utilities/tariff-information 

அத்துடன் கேஸ் எரிபொருளுக்கான விலையும் S$0.30 உயர்த்தப்பட்டுள்ளது. S$23.12-ஆக இருந்த விலை S$23.42-ஆக உயர்ந்துள்ளது.

கேஸ் விலையானது,

General Tariff-ல் S$23.12 -ல் இருந்து S$23.42 ஆக அதிகரித்துள்ளது. 9 சதவிகித GST-உடன் S$25.53 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Bulk Tariff A-வில் S$21.91 -ல் இருந்து S$22.21 ஆக அதிகரித்துள்ளது. 9 சதவிகித GST-உடன் S$24.21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Bulk Tariff B-ல் S$21.91 -ல் இருந்து S$21.61 ஆக அதிகரித்துள்ளது. 9 சதவிகித GST-உடன் S$23.55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரை மேலே குறிப்பிட்டபடி தான் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இந்த கட்டணம் செப்டம்பர் இறுதியில் அடுத்த காலாண்டிற்காக மறுபரிசீலனை செய்யப்படும்.  

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts