TamilSaaga

“MRT நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கபோறேன்.. எல்லாரும் சாகப்போறீங்க” : களேபரமான சிங்கப்பூர் ரயில் நிலையம்

சிங்கப்பூரில் ரயிலில் பயணிகளை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 17 வயது இளம் நபர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 26, 2019 அன்று, சிங்கப்பூரின் வடகிழக்கு ரயில் பாதையில் ஹூகாங் செல்லும் ரயிலில் சிராங்கூன் ரயில் நிலையத்தில் அந்த இளம் நபர் எறியுள்ளார்.

சிங்கப்பூர் பார்லிமென்டில் கம்பீரமாக ஒலித்த “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” பாடல் – கடைசி வரை தமிழகத்தில் தான் எந்த ஊர் என்பது தெரியாமலேயே மறைந்த அதிபர் எஸ்.ஆர்.நாதன்

தனது மடியில் ஒரு பையை வைத்துக்கொண்டு ரயிலில் அமர்ந்திருந்த அவர், அருகில் இருந்த பயணிகளை நோக்கி, “நண்பர்களே, என் பையில் வெடிகுண்டு இருக்கிறது… எனவே, ரயில் நிலையம் முழுவதையும் குண்டு வீசி தகர்க்கப்போகிறோம். ரயிலுக்குள் இருக்கும் நீங்கள் அனைவரும் இறக்கப் போகிறீர்கள்” என்று சத்தமாக கூற அனைத்து பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் அந்த பையை தான் அமர்ந்திருந்த ரயிலின் இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, காதுகளை மூடிக்கொண்டு, அரபு மொழியில் “கடவுள் பெரியவர்” என்று பொருள்படும் “அல்லாஹு அக்பர்” என்ற சொல்லை கத்தியுள்ளார். மூச்சே நின்ற நிலையில் அந்த ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ந்துபோக இறுதியில் அவர் கூறியது பொய் என்று தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் நடந்த மறுநாள் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது தான் அவர் ஏற்கனவே பல குற்றங்களை செய்திருப்பது தெரியவந்தது.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி இதே இளைஞர் ஒரு கடைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த ​ஒரு மிகப்பெரிய தங்கச் சங்கிலியைப் பார்க்க விருப்பப்படுவதாக கூற கடைக்காரரும் S$7,455 விலைகொண்ட சங்கிலியை அதன் Price Tagவுடன் கொடுத்துள்ளார். சற்றும் அவர் யோசிக்காத நேரத்தில் அந்த சங்கிலியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார் அந்த வாலிபர். பின்னர் அந்த வாலிபர் அருகில் உள்ள ஒரு இடத்திற்கு சென்று அந்த தங்கச் சங்கிலியை விட்டுச் செல்ல, 15 நிமிடங்களுக்குப் பிறகு அந்த வாலிபரின் நண்பர் அதை எடுத்து சென்றுள்ளார். பிறகு அந்தத் தங்கச் சங்கிலி அடகுக் கடையில் S$6,500க்கு விற்று நண்பனுக்கு S$150 கொடுத்துள்ளார்.

“சிங்கப்பூரில் பிரச்சனையில் தவித்த வெளிநாட்டு பெண்” – ICA அதிகாரி என்று பொய் சொல்லி “உல்லாசம்” அனுபவித்த சிங்கப்பூரர்

இதுமட்டுமல்லாமல் ஒரு நபரை தாக்கிய வழக்கிலும் இந்த வாலிபர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரயிலில் நடந்த அசம்பாவிதம் குறித்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் மீண்டும் வரும் மே 23ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts