சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் துபையில் உள்ள Dubai Exhibition Centre என்ற இடத்தில் நடக்கவுள்ளது Expo 2020. ஏற்கனவே 20 அக்டோபர் 2020 முதல் 10 ஏப்ரல் 2021 வரை இந்த எக்ஸ்போ நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக சற்று தள்ளிப்போனது.
இந்நிலையில் வரும் 1 அக்டோபர் 2021 தொடங்கி இந்த எக்ஸ்போ 31 மார்ச் 2022 வரை நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Expo என்றால் என்ன?
Expo என்பது வேறொன்றும் அல்ல, Exhibitionனை தான் பரவலாக Expo என்று அழைக்கின்றனர். சிறுவயதில் நிச்சயம் நாம் பல Exhibitionகளை கடந்து வந்திருப்போம். ஆனால் சிறுவயதில் நான் கண்ட அந்த Exhibitionனை விட இது அறிவியல் ரீதியாகவும் அளவு ரீதியாகவும் 1000 மடங்கு பெரிது என்பதே நிதர்சனம். பல நாடுகளை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் தனிப்பட்ட படைப்புகளை, தங்கள் நாட்டை பிரதிபலிக்கும் படைப்புகளை இங்கு வெளியிடுவார்.
பாரிஸ் நகரத்தில் உள்ள Bureau International des Expositions என்ற நிறுவனம் தான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த Expoவை நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு இந்த Expo துபாய் நாட்டில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் உள்பட உலக அளவில் இருந்து சுமார் 194 நாடுகள் இந்த Expoவில் பங்கேற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் Expo எங்கே நடந்தது ?
1851ம் ஆண்டு தான் உலகத்தின் முதல் Expo லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த Expo சுமார் 25 நாடுகளை சேர்ந்த 6 மில்லியன் மக்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதன்முதலில் நடந்த இந்த Expo “அனைத்து நாட்டினருக்கும் தொழில்வளம்” என்ற தலைப்பில் தான் நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை அதாவது ஒரு தீம் சார்ந்தே இந்த Expo நடத்தப்படுகிறது.
Dubai Expo
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடக்கவேண்டிய Expo தற்போது 2021ம் ஆண்டில் நடைபெறுகின்றது. துபாய் அரசு இந்த Expoவில் சுமார் 194 நாடுகளில் இருந்து 25 மில்லியன் மக்கள் பங்குபெறுவர்கள் என்று கணக்கிட்டுள்ளது. Connecting Minds Creating Future என்ற தலைப்பில் தான் இந்த Expo நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரமாண்டமான முறையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.