உலக அளவில் புகழ்பெற்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான டிஸ்னி+, சிங்கப்பூரில் உள்ள தனது புதிய சந்தாதாரர்களுக்கு அவர்களின் முதல் மாதத்திற்கான தள்ளுபடியில் பெரிய அளவில் சலுகையை அறிவித்துள்ளது. இனி நவம்பர் 15, மாலை 4 மணி வரை, புதியவர்கள் 1.98 வெள்ளிக்கு அவர்களின் ஸ்ட்ரீமிங் தளத்தில் சேரலாம், இதற்கு முன்பு மாதத்திற்கு 11.98 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்னி+ தினத்தை (நவம்பர் 12) கொண்டாடும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சந்தாதாரர்களுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வால்ட் டிஸ்னி நிறுவனம் கடந்த மாதம் ஆசியாவில் இருபத்தி ஏழு புதிய தலைப்புகளை வெளியிட்டது, ஏனெனில் அது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியத்தில் அதன் டிஸ்னி பிளஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் சேவைகளின் தடத்தை விரிவுபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்ட்ரீமிங் சேவை தற்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தைவானில் இந்த நவம்பர் 2021-ல் தொடங்கப்பட உள்ளது என்பதும் நினைவுகூரத்தக்கது.