சிங்கப்பூர் அரசு தனது எல்லைகளை தற்போது முற்றிலும் தளர்த்தி உள்ளது என்றே கூறலாம், இன்று ஊடகங்களிடம் பேசிய நமது சிங்கப்பூர் பிரதமரும் ஏப்ரல் 26ம் தேதி முதல் அளிக்கப்படும் தளர்வுகள், தொற்று நோய்க்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த அதே நிலைக்கு சிங்கப்பூரை அழைத்துச் செல்லும் என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் கவனத்திற்கு..
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு முதல் டோஸ் எடுத்த நிலையில் இரண்டாவது டோஸ் எடுக்கும் முன் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். அதன் பிறகு சிகிச்சை பெற்று அவர்கள் தாயகம் திரும்பி இருக்கலாம்.
இந்நிலையில் அவ்வாறு ஒரு டோஸ் மட்டுமே போட்டு சிங்கப்பூரில் இருந்து தாயகம் சென்ற ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூர் வரும்பொழுது அவர்கள் இங்கு செலுத்தி கொண்ட அந்த முதல் டோஸ் சான்றிதழ் மட்டுமே போதாது.
விமான நிறுவனங்கள் இது போன்று வரும் ஊழியர்களிடம் “Discharge Memo” என்று அழைக்கப்படுகின்ற ஒரு தனி சான்றிதழை எதிர்பார்க்கின்றனர். இந்த சான்றிதழ் நீங்கள் சிங்கப்பூரில் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியில் செல்லும்போது உங்களுக்கு அளிக்கப்பட்டு ஒரு சான்றிதழ்.
ஆகவே சிங்கப்பூர் திரும்பும்போது முதல் டோஸ் போட்ட சான்றிதழோடு இந்த சான்றிதழையும் எடுத்து வரவேண்டும். அந்த சான்றிதழ்கள் உங்கள் கைவசம் இல்லை என்றால் நிச்சயம் நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த சான்றிதழை பெற்று சிங்கப்பூர் மீண்டும் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அறிவிக்கப்பட்ட தரவுகளின்படி Work Permit வைத்திருக்கும் ஊழியர்கள், வரும் மே மாதம் 1ம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் வருவதற்குரிய அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. இந்த தளர்வு மலேசியர்கள் அல்லாதவர்களுக்கும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பொருந்தும்.
அதேசமயம், முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகளுக்கான நுழைவு அனுமதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் MOH தெரிவித்துள்ளது. இந்த நாள் வரை Construction, கப்பல் துறைகளில் In-Principal Approval எனும் பொது அனுமதி பெற்றவர்கள், சிங்கப்பூருக்குள் நுழைய entry approval பெற வேண்டியுள்ளது. ஆனால், புதிய தளர்வுகளின் படி, இனி entry approval பெறத் தேவையில்லை என்று MOM அறிவித்துள்ளது.
News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091