சிங்கப்பூரில் அரசு பொது சேவையில் உள்ள ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய மின்னிலக்க தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தளத்தை பயன்படுத்துவதன் வாயிலாக சுமார் 1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த மின்னலக்க தளத்தில் தேவையான பாடங்களை சேர்க்கவும் வடிவமைக்கவும் Microsoft, Coursera போன்ற நிறுவனங்கள் இணைந்துள்ளன.
வளரும் தொழில்நுட்ப காலக் கட்டத்தில் இந்த மின்னிலக்க தளமானது, தற்போதைய அட்வான்ஸ் தொழில்நுட்பங்களை ஊழியர்கள் அறிந்துகொள்ள சாதகமாக அமையும்.
இந்த தளத்தை முழுமையாக சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகம் நிர்வகிக்கும்.
அரசின் பொதுச்சேவை துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மின்னிலக்க தளத்தின் அடிப்படை திறன்களை பெற வேண்டியது அவசியமானது என்றும் தர படிநிலையை வகுக்க இது பயன்படும் என்றும் GovTech அமைப்பின் அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார்.