TamilSaaga

கோவிட் பெருந்தொற்றால் மீண்டும் சிக்கலில் சிங்கப்பூர்… உடனே பரிசோதிக்க கூறும் மருத்துவர்கள்… இதான் பிரச்னையாம்…

கோவிட் பெருந்தொற்று சூழலைக் கடந்து உலகம் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறது. கொரோனா முழுவதுமாக மறைந்துவிடவில்லை என்றாலும், பாதிப்புகளை சமாளித்து உலகம் நிற்கிறது. இந்தநிலையில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது கோவிட்டின் பின்விளைவுகளில் மோசமாக நீரிழிவு வியாதி அதிகரிக்க துவங்கி விட்டதாம். சிங்கப்பூரில் இருக்கும் 3ல் ஒருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கொரோனாவால் சிங்கப்பூர் போன்ற பல நாடுகளும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வந்தன. இதில் எல்லா நாடுகளுமே கோவிட் சங்கிலியை விட்டு வெளிவந்துவிட்டது. ஆனால், இந்நோயின் பின்விளைவுகள் தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், நீரிழிவு நோயின் தாக்கம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து விட்டது.

சிங்கப்பூரில், 24 முதல் 35 வயதுடைய இளைஞர்களில் 34 சதவீதம் பேர், தங்களின் 65 வயதுக்குள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் மருத்துவத் துறையினர். மேலும், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாக கருதப்படும் Pre-diabetes நிலையில் இருப்பவர்களில் 35 சதவீதம் பேர் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி ஆய்வு முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.

சரியான நேரத்தில் நீரிழிவு நோய் குறித்து அறிந்து கொண்டால் உங்களால் அதை தள்ளிப்போடவோ அல்லது தடுக்கவோ முடியும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். Healthier SG திட்டம் மூலம் சிங்கப்பூர் மக்கள் இடையே நீரிழிவு நோய் அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் மக்களுக்கு வகை 2 நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கான இலவச சுகாதார பரிசோதனைகளை வழங்கி வருகிறது. நீரிழிவு நோயைத் தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் இதில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், சிங்கப்பூர் மக்களை Healthier SG திட்டம் மூலம் பொது மருத்துவர் அல்லது பாலிகிளினிக் மருத்துவரிடம் பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

உலக நீரிழிவு தினமான நவம்பர் 14-ல் உடல் ஆரோக்கியத்தினை பங்கம் செய்யும் நீரிழிவு நோய் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். நீரிழிவு டெஸ்ட் மூலம் உங்களின் சர்க்கரை அளவை அறிந்து கொள்வதும் முக்கியம். சமநிலையான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்ற நீரிழிவுக்கு முந்தைய ஆபத்தை குறைக்கும் பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியதும் முக்கியம். ஏனெனில், இந்த நிலை தொடரும் பட்சத்தில், 2045-க்குள் உலக மக்கள் தொகையில் 12.2 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 800 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts