TamilSaaga

‘ஈரச்சந்தைகளை தவிர்க்கும் மக்கள்’ – அதிகரிக்கும் ஆன்லைன் மளிகை பொருட்களுக்கான தேவை

ஜுராங் மீன்வள துறைமுகம் மூடல், மற்றும் சமீபத்திய பெருந்தொற்று தடுப்பிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகிவற்றால் ஆன்லைன் மளிகைக்கடைக்காரர்கள் பலரும் உணவுப் பொருட்கள் மற்றும் விநியோக நேரங்களுக்கான தேவை அதிகரிப்பதைக் கண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் வியாழக்கிழமை இரண்டாம்கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதிலிருந்து ரெட் மார்ட், FairPrice மற்றும் டைரி போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஆர்டர்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.

கடந்த வாரம், குளிர்ந்த கடல் உணவு விநியோகத்தில் உள்ள குறுகிய கால இடையூறுகளின் விளைவுகளை எளிதாக்கும் பொருட்டு, கடைக்காரர்கள் அவர்களின் தேர்வுகள் மற்றும் கடல் உணவு ஆதாரங்களை விரிவுபடுத்துமாறு நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ அறிவுறுத்தினார்.

மேலும் “கடந்த வாரத்தில் இருந்து தேவை அதிகரித்ததை நாங்கள் காண்கிறோம், அண்மையில் ஜுராங் மீன்வள துறைமுகத்தை மூடப்பட்டது, இது புதிய மற்றும் உறைந்த கடல் உணவுகளுக்கான ஆர்டர்கள் அதிகரிக்க வழிவகுத்தது என்றும் தலைமை சில்லறை வணிக அதிகாரி ரிச்சர்ட் ரூட்டி தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக தொற்று காரணமாக மக்கள் ஈரச்சந்தைகளை தவிர்ப்பதால், சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Related posts