TamilSaaga

குளறுபடியால் நடந்த நகல் அட்டை பரிவர்த்தனைகள் திருப்பியளிக்கப்பட்டன – DBS

இன்று (ஜூன்.19 ) டி.பி.எஸ் வங்கி இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் “டி.பி.எஸ் டெபிட் கார்டு மட்டும் க்ரெடிட் கார்டுகளில் செய்யப்பட்ட அனைத்து நகல் பரிவர்த்தனைகளும் வெற்றிகரமாக திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜீன்.18) அன்று ஒரு கட்டண செயலாக்கத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகளின் காரணமாக சில டி.பி.எஸ் கார்டுகளில் நகல் பரிவர்த்தணை நடந்துவிட்டது.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் கேஷ் லைன் (Cashline) ஆகியவற்றை பாதித்த நகல் பரிவர்த்தனைகளை நாங்கள் திருப்பியளித்துள்ளோம். இந்த தேவையற்ற சிரமத்துக்காகவும் கவலைக்காகவும் நாங்கள் வருந்துகிறோம் என்று டி.பி.எஸ் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

முகநூல் புதுப்பித்தலில் இந்த டி.பி.எஸ் குளறுபடியின் விளைவாக ஏற்பட்ட கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். எங்கள் அமைப்பு பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பில் சமரசமற்றது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகள் திருப்பி அளிக்கப்பட்டதா என்பதை சரிபார்க்க பல்வேறு தளத்துடன் டி.பி.எஸ் Digibank மொபைல் சேவையையும் சேர்த்து பயன்படுத்தலாம்.

வெள்ளிக்கிழமை டி.பி.எஸ் வாடிக்கையாளர் பலரும் முகநூல் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள். நகல் பரிவர்த்தனை மற்றும் Negative Balance போன்ற சிக்கல்களை சந்தித்தாக கூறியிருந்தார்கள் என டி.பி.எஸ் கூறியுள்ளது.

இதை பற்றி சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறும்போது ” டி.பி.எஸ் அதன் கட்டண செயலாக்க அமைப்பில் ஒரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தது. இதை பற்றி முழுமையாக விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என MAS கூறியுள்ளது.

Related posts