TamilSaaga

“சிங்கப்பூரில் வளர்ப்பு மகளுக்கு பாலியல் சீண்டல்” : 59 வயது நபருக்கு 3 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் மனைவி வீட்டில் இருந்தபோதும் கூட தனது 12 வயது வளர்ப்பு மகளை பலமுறை பாலியல் துன்புறுத்திய ஒருவருக்கு இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) அன்று மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 59 வயதாகிறது என்பதால் அவருக்கு பிரம்படி வழங்கமுடியாத நிலை உள்ளது. அதேபோல பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்கும் உத்தரவுகள் காரணமாக அந்த மனிதனின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த முதியவர், மைனரை மூன்று முறை துன்புறுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் அவருக்கு வழங்கிய தீர்ப்பின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த முதியவர் ஒரு விநியோகஸ்தர் என்று நீதிமன்றம் கேள்விப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவரின் தந்தை இறந்து பல வருடங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2019ல் பாதிக்கப்பட்டவரின் தாயை இந்த மனிதர் மணந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் தாயார் அடிக்கடி வேலைக்காக வெளியே சென்றுவிட, அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் தினசரி தேவைகளை கவனித்துக்கொண்டார். அந்த பாதிக்கப்பட்ட பெண் அவரை “அப்பா” என்று அழைத்துள்ளார்.

கடந்த மே 19, 2019 அன்று காலை 10 மணியளவில், அந்த நபர் தனது 12 வயது வளர்ப்பு மகளுடன் அறையில் சோபாவில் அமர்ந்திருந்தார். அதே நேரத்தில் அவரது மனைவி சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. திடீரென்று, அந்த மனிதன் அந்தப் பெண்ணை அவரை நோக்கி இழுத்து அவள் தலையில் தட்டியுள்ளார். மேலும் அவர் அதே பெண்ணின் சட்டையின் மீது கைவைத்து, அவள் ப்ரா அணிந்திருக்கிறாரா என்று கேட்டுள்ளார்.

அந்த பெண் இல்லை என்று சொன்னதும், அந்த முதியவர் இரண்டு கைகளையும் அவளது சட்டைக்குள் வைத்து அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி நகரவோ அல்லது சத்தம் போடவோ துணியவில்லை. அவர் தன்னை விட பெரியவராக இருந்த நிலையில் அந்த பெண்ணால் அவரை தள்ளிவிடவும் முடியவில்லை. மேலும் அந்த முதியவர் அச்சிறுமியின் ஆடைகளை களைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

பள்ளிக்கு சென்ற சிறுமி தனது நண்பர்கள் மூலம் ஆசியர்களுக்கு இந்த விஷயம் குறித்து தகவல் அளித்து அடுத்தகட்ட நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts