சிங்கப்பூரில் சமூக உபசரிப்பாளர்களாக பணிபுரிந்து வரும் வியட்நாமிய பெண்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இடையே கிருமி பரவல் குறித்த விசாரணை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட அவர்கள் KTV இசைக்கூடங்களுக்கு அல்லது தற்போது உணவு பான கடைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரவு நேர இசைக் கூட்டங்களுக்கு அடிக்கடி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் சமூக அளவில் தற்போது சிங்கப்பூரில் பரவக்கூடிய கிருமித்தொற்று சம்பவங்களை உடனடியாக கண்டறிய அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த மூன்று இசைக் கூடங்களின் தகவல்கள் பின்வருமாறு..Far East கடைத்தெரு பகுதியில் உள்ள Supreme KTV அடுத்தபடியாக Tanglin கடைத்தெரு பகுதியில் உள்ள Empress KTV மற்றும் Balestier Pointல் உள்ள Club Dolce.
இந்நிலையில் இந்த பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அல்லது குறிப்பிட்ட இசை கூடங்களுக்கு கடந்த ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை சென்றிருந்த வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் வியட்நாமிய சமூக உபசரிப்பார்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் அடுத்து வரும் 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலை சீரான கவனத்தோடு கவனிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.