TamilSaaga

வீழ்ச்சியில் கட்டுமானத்துறை.. சிங்கப்பூரில் ஊழியர் தேவை அதிகரிப்பு – Complete ரிப்போர்ட்

சிங்கப்பூரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்ற சூழலில் கட்டுமான ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக அத்துறை பெரும் சவால்களையும் கடின் சூழல்களையும் எதிர்கொண்டு வருகிறது.

சமீபத்திய கணக்கியல் நிறுவன கட்டுப்பாட்டு ஆணையத்தின் தகவல்களின்படி சுமார் 1538 கட்டுமான நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் கட்டுமானப்பணிகள் துவங்கினாலும் எல்லைகள் மூடப்பட்டுள்ள காரணத்தால் பணியாளர்களின் வருகை குறைந்து கட்டுமான பணிகள் தேக்கமடைந்து அதன் முடிவடையும் காலமும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020 டிசம்பர் 31ம் தேதி கணக்கின்படி சிங்கப்பூரில் கட்டுமானப்பணி ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2,88,700 ஆக இருந்தது. அந்த ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 52,800 வரை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் பெரும்பாலோனோர் இந்தியா, பங்களாதேஷ், மியான்மர் மற்றும் சீனா போன்ற நாட்டினை சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.3% வளர்ச்சியை கண்ட கட்டுமானத்துறையானது பிறகு இரண்டாம் காலாண்டில் சுமார் 7.6% குறைந்தது.

ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டாலும் அரசின் மீட்பு நடவடிக்கை மற்றும் புதிதாக துவங்கப்பட்டுள்ள 2037 நிறவனங்கள் விரைவில் இந்த்துறை மீண்டு வரும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

Related posts