TamilSaaga

இந்தியர்கள் சிங்கப்பூரில் நர்ஸாக வேலை செய்ய எப்படி விண்ணப்பிக்கலாம்? – முழு விவரங்கள்

சிங்கப்பூர் உலகத் தரம் வாய்ந்த சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. sஇது செவிலியர்களுக்கு உயர் தொழில்முறை தரங்களில் பயிற்சி பெறவும், பணிபுரியவும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

சிங்கப்பூரில் செவிலியர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்திய செவிலியர்கள் தங்கள் திறன்கள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் பணிபுரியலாம்.

இந்திய செவிலியர்களைப் பொறுத்தவரை, சிங்கப்பூரில் பணிபுரிவது தொழில்முறை வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் புதிய கலாச்சார அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு சில முக்கிய தகுதிகள், பதிவு செயல்முறைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

நர்சிங் டிகிரி/டிப்ளோமா: சிங்கப்பூரில் நர்ஸ் ஆக பணிபுரிய, உங்களுக்கு இந்தியாவில் செல்லுபடியாகும் பி.எஸ்சி நர்சிங் அல்லது ஜி.என்.எம் (General Nursing and Midwifery) போன்ற தகுதி இருக்க வேண்டும்.

பணிபுரிபில் அனுபவம்: குறைந்தது 1-2 வருட நர்சிங் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

இந்திய நர்சிங் கவுன்சில் (Indian Nursing Council – INC) அல்லது மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் நர்ஸாக வேலை செய்ய, நீங்கள் Singapore Nursing Board (SNB)-ல் பதிவு செய்ய வேண்டும்.

ஆவணங்கள்: SNB பதிவுக்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், INC/மாநில கவுன்சில் பதிவு சான்றிதழ், அனுபவச் சான்று, பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவை அனைத்தும் நோட்டரி மூலம் சான்றளிக்கப்பட்டு ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

SNB தேர்வு: சில சமயங்களில், சிங்கப்பூர் நர்சிங் தேர்வு (Registered Nurse Licensure Exam) எழுத வேண்டியிருக்கும். இதற்கு முன் வேலை வாய்ப்பு (Job Offer) பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வில் மருத்துவம், அறுவை சிகிச்சை, மருந்தியல், தொற்று கட்டுப்பாடு, அவசரநிலை நடைமுறைகள், நர்ஸிங் நெறிமுறைகள், தொழில்முறை நடத்தை போன்ற தலைப்புகளில் கேள்விகள் அடங்கும். இது ஒரு பல தேர்வு கேள்வி (Multiple Choice Questions – MCQ) வகை தேர்வு ஆகும். பொதுவாக 2-3 மணி நேரம் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நீங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். இந்த பரிசோதனையில், உங்கள் உடல்நிலை நர்ஸிங் பணிக்கு ஏற்றதா என சோதிக்கப்படும்.

SNB இணையதளம் (www.healthprofessionals.gov.sg/snb) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நேரடி விண்ணப்பம்: சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள் (Ex: Singapore General Hospital, Tan Tock Seng Hospital, National University Hospital) அல்லது தனியார் மருத்துவமனைகளின் (Raffles Hospital, Mount Elizabeth) இணையதளங்களில் வேலை வாய்ப்புகளைத் தேடலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

ஆன்லைன் தளங்கள்: Jobstreet Singapore, LinkedIn, Indeed போன்ற தளங்களில் “Nurse Jobs in Singapore for Indians” என்று தேடி விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு கிடைத்ததும், சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்திடம் (Ministry of Manpower – MOM) வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை ஒப்பந்தம், கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். முழு செயல்முறை (வேலை தேடுதல், SNB பதிவு, விசா) 3-6 மாதங்கள் ஆகலாம். மோசடி முகவர்களைத் தவிர்க்க, அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள்.

ஆவணங்கள்: உங்கள் சான்றிதழ்கள் அனைத்தையும் அங்கீகரித்து (Attestation) ஆங்கிலத்தில் தயார் செய்யுங்கள். மேலும் தகவலுக்கு SNB இணையதளம் தொடர்பு கொள்ளுங்கள். (www.healthprofessionals.gov.sg/snb)

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

 

Related posts