TamilSaaga

சிங்கப்பூரில் அடுத்த 6 மாதத்தில்… 3 ஊழியர்களில் ஒருத்தர் வேலையை விட்டு போயிடுவாங்க – எல்லாத்துக்கும் ‘அதுதான்’ காரணம் – உண்மையை புட்டு புட்டு வைத்த MMB-யின் ஆய்வு!

SINGAPORE: சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் மனநல பாதிப்பு மற்றும் சோர்வு போன்ற காரணிகளால் திறமையான ஊழியர்களை இழக்கும் அபாயத்தில் உள்ளன என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை, சம்பளம் என்பது பலரது கனவாக இருக்கலாம். ஆனால், “காத்து வாக்குல வேலை பார்க்கலாம்” என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு சிங்கை ஏதுவான இடம் கிடையாது. காரணம் இங்கு வேலையின் போது பிழிந்து எடுக்கப்பட்டுவிடும்.

அதையும் மீறி, கடமைக்காக வேலை செய்பவர்களால் இங்கு முன்னேற முடியாது. ஸோ, வாழ்வில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும்.. சீக்கிரம் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் சிங்கப்பூர் வரலாம். ஆனால், எப்போதும் வேலை.. வேலை.. வேலை.. என்ற பிரஷர் இங்கு அதிகம்.

இந்த சூழலில் தான், சிங்கையில் உள்ள சில நிறுவனங்கள், பணியாளர்களின் மன அழுத்தத்திற்கு தீர்வு கண்டறியாமல் இருப்பதால், திறமையான ஊழியர்களை இழக்கும் ஆபத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. நிறுவனத்தின் முதலாளிகள், இந்த விஷயத்தை திறம்பட கையாளவில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக, சிங்கப்பூரில் 10 நிறுவங்களில் 6 நிறுவனங்களோ அல்லது 66 சதவீதம் பேர் மட்டுமே மனநலச் சவால்களை எதிர்கொள்ள தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உலக சராசரியான 70 சதவீதத்தை விடவும், ஆசியாவின் சராசரி 74 சதவீதத்தை விடவும் குறைவாக உள்ளது.

பிரபல ஆலோசனை நிறுவனமான Mercer Marsh Benefits (MMB) மூலம் நடத்தப்பட்ட இந்த சர்வே, மார்ச் மாதத்தில் 25 நாடுகள் மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த 2,600 மனித வளத்துறை அதிகாரிகளிடம் நடத்தப்பட்டது.

இதில், ஆசியாவில் உள்ள 89 சதவீத நிறுவனங்கள் மற்றும் உலகளவில் 87 சதவீத நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் சுமார் 92 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களின் மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை குறித்து அக்கறை கொள்ளாமல் இருப்பதால், வணிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.

MMB இன் சிங்கப்பூர்த் தலைவரான நீல் நரலே கூறுகையில், சிங்கப்பூரில் உள்ள தொழிலாளர்களில் பாதி பேர் ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக வெளியாகியுள்ள முடிவுகள் கவலையளிக்கின்றன என்றும், அடுத்த ஆறு மாதங்களில் மூன்றில் ஒரு ஊழியர் ராஜினாமா செய்வதைப் பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க – கபடி.. கபடி… சிங்கப்பூரில் தொடையைத் தட்டி… கெத்து காட்டிய வெளிநாட்டு ஊழியர்கள் – Final-ல் தோற்றாலும் “மீசையை முறுக்கிய” ஆட்டம்!

மேலும், “ஊழியர்களின் மனநலம் மற்றும் பணியிட சோர்வு பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் முதலாளிகள் திறமையான ஊழியர்களை இழக்க நேரிடும். முதலாளிகள் இதற்கு விரைவில் ஒரு தீர்வை கண்டறிந்தே ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றும் நீல் நரலே கூறியிருக்கிறார்.

சிங்கப்பூரில் உள்ளூர்க்காரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த சிக்கல் பொதுவானதாகவே உள்ளது என்று தெரிவித்திருப்பது ஹைலைட். குறிப்பாக, சிங்கையில் வந்து பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த பிரஷர் என்பது டபுள் மடங்கும் அதிகம் என்று கூறலாம்.

ஏற்கனவே அவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து, சொந்த ஊரை விட்டு வெளியே வந்து இங்கு வேலைப் பார்க்கிறார்கள். முதலில் எல்லாம் சுமூகமாக போவது போல் தான் தெரியும். கையில் பணம் புரளும் போது, வீட்டிற்கு பணம் அனுப்பும் போதும், ‘கடவுளே நன்றி..’ என்று மனம் துள்ளும். ஆனால், ஒருக்கட்டத்தில் அவர்களின் அனுப்புக்குரியவர்கள், மனதுக்கு பிடித்தவர்கள்… இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமெனில்…

‘ஒருவர் கல்யாணம் செய்துவிட்டு வந்திருப்பார்… அங்கே சொந்த ஊரில் மனைவிக்கு பிரசவம் ஆகி குழந்தை பிறந்திருக்கும்.. அப்போது, பிரசவத்தின் போதும் உடன் இருக்க முடியாது.. குழந்தை பிறந்த பிறகும் தூக்கி கொஞ்ச முடியாது’. இது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லி புரியாது.

சிலருக்கு அவர்களின் பெற்றோரின் உடல்நிலை முடியாமல் இருக்கும். இங்கிருந்து மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடியும். ஆனால், கூட இருந்து பார்த்துக் கொள்ளவே முடியாது. யாரையாவது ஒருவரை சார்ந்திருக்க வேண்டும். அவர்கள் சரியாக நம் பெற்றோர்களை கவனிக்கிறார்களா என்ற கவலையை ஒருவரால் விளக்க முடியுமா? இது மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சிங்கப்பூர் மட்டுமல்ல.. கடல் கடந்து வெளிநாடு சென்று வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் நிலை இதுதான்.

இப்படி வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தம் இருக்கும் நிலையில், பணியிடத்தில் கொடுக்கப்படும் பாரத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டு பாரங்களும் சேர்ந்தால், ஒரு ஊழியரின் நிலை? இதைத் தான் ercer Marsh Benefits (MMB) நிறுவனமும் குறிப்பிடுகிறது. இந்த இடத்தில், சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்கள் மீது அக்கறை கொள்வதில் என்பதை இந்த ஆய்வின் முடிவு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts