TamilSaaga

விரைவில் திறக்கப்படும் இந்திய சிங்கப்பூர் வணிக விமான சேவைகள்? – CAAS அறிவிப்பு

VTL திட்டத்தின் கீழ் மூடப்பட்டிருந்த தனது  எல்லைகளை, படிப்படியாக ஒவ்வொரு நாடுகளுக்காக  சிங்கப்பூர் திறந்து வருவது அனைவரும் அறிந்ததே.

அந்த வரிசையில் நவம்பர் 29ஆம் தேதி முதல் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்குமான பயணிகள் விமான சேவைக தொடங்கவிருப்பதாக கடந்த ஞாயிறு அன்று சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் CAAS அறிவித்திருந்தது. அந்த தடுப்பூசி பயணப்பாதை VTL திட்டத்தில் பயணிப்பதற்கான விண்ணப்பங்கள் VTP நவம்பர் 22 சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணியிலிருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரின் சின்ன சின்ன ரகசியங்கள்

இந்த பயணிகள் விமான சேவை தொடங்கப்படுவதைத் தொடர்ந்து வணிக ரீதியிலான விமான சேவைகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு . ஜெய்சங்கர் அவர்கள் சிங்கப்பூர் சென்று சிங்கப்பூரின் தலைமை அமைச்சர் திரு . லீ மற்றும் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர்கள், அனைத்து தமிழ் அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது விரைவில் வணிக ரீதியிலான விமான சேவைகள் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம் உலக மற்றும் இரு நாடுகளின் பொருளாதார நிலை மற்றும் வளர்ச்சி குறித்ததாக அமைந்தது என்னும் அறிவிப்புகளின் அடிப்படையிலும்,

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இந்தியா சிங்கப்பூர் இருநாடுகளுக்கு இடையேயான வணிக பயணிகளின் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக , சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் CAAS  ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலும், விரைவில் வணிக விமானங்களின் சேவை தொடங்கும் எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts