TamilSaaga

ஆப்கானிஸ்தான் – நடுவானில் பறந்த விமானம்.. தவறி விழுந்த மூன்று பேர் – பதைபதைக்க வைக்கும் வீடியோ

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான் படையினரின் ஆதிக்கம் அங்கு அதிகரித்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆப்கானிஸ்தான் நாட்டின் பல முக்கிய இடங்களை கைப்பற்றிய தலிபான் அமைப்பு, சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமர் மற்றும் துணை பிரதமர் ஆகியோர் அந்நாட்டில் இருந்து வெளியேறினார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்க உருவானதே தலிபான் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருதல், ஆயுதங்களை கைவிடுதல் மற்றும் தியோபந்தி கருத்துக்களின் அடிப்படையில் ஷ்ரயா சட்டத்தை அமல் படுத்துவது என்ற மூன்றும் தான் தலிபான்களின் முக்கிய கோட்பாடு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு பதட்டமான சூழல் நிலவுவதால் மக்கள் பலர் அங்கிருந்து விமானங்கள் மூலம் மெக்ஸிகோ நாட்டிற்கு சென்று வருகின்றனர். மேலும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய் குவிந்த நிலையில் ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல் நேற்று வெளியானது. அதே சமயம் மக்கள் விமானங்களுக்கு பின்னால் மக்கள் ஓடும் அவலம் மிகுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதே போல ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு 150 பேர் செல்லக்கூடிய கொள்ளளவு கொண்ட சரக்கு விமானத்தில் சுமார் 640 பயணிகள் பயணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் விமானத்தின் வெளிப்புறத்தில் அமர்ந்து உச்சகட்ட ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட மூன்று பேர் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த நேரத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றது.

Related posts