TamilSaaga

“காலநிலை மாற்றத்தால் சிங்கப்பூரில் தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது” – அமைச்சர் கிராஸ் ஃபூ

சிங்கப்பூரில் பருவநிலை மாற்றம் மற்றும் வானிலை மாற்றங்கள் மேலும் ஒழுங்கற்றதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் தொடர்ந்து வானிலை நிலவரங்களை சரிபார்த்து, அதற்கேற்ப தங்கள் நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

பருவநிலை மாற்றம் அதிக தீவிர மழையை கொண்டு வருவதால், திடீர் வெள்ளத்தை முற்றிலும் தவிர்க்க முடியாது என்று அவர் கூறினார். “மிக நீண்ட காலமாக, சிங்கப்பூரர்கள் நம் வானிலைக்கு நன்கு பழகிவிட்டனர், ஏனென்றால் இங்கு வானிலை அவ்வளவாக மாறாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வானிலை முன்னறிவிப்புகளைச் சரிபார்க்கும் பழக்கத்தை நாம் உருவாக்க வேண்டும்” என்று கிரேஸ் கூறினார்.

காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் இண்டர் -கவர்மென்டரல் பேனல் (ஐபிசிசி) இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கான தாக்கங்கள் குறித்த ஒரு வெபினாரின் போது திருமதி ஃபூ இந்த தகவலை தெரிவித்தார்.

IPCC எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change) வெளியிட்ட அறிக்கை மனிதகுலத்திற்கு எச்சரிக்கை விடுத்தது, உலகளாவிய உமிழ்வுகள் 2050 க்குள் நிகர பூஜ்ஜியத்தை எட்டவில்லை என்றால் உலகம் மிகவும் தீவிரமான வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் பிற பேரழிவு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வானிலை முன்னறிவிப்பு திறன்களை வலுப்படுத்துவதன் மூலமும், கல்வி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துவதன் மூலமும் சிங்கப்பூர் அரசாங்கம் தனது பங்கைச் செய்யும் என்று அமைச்சர் கிரேஸ் அவர்கள் கூறினார்.

Related posts