TamilSaaga

“சிங்கப்பூர் வந்த ஒருவருக்கு புதிய மாறுபாட்டின் வடிவம் கொண்ட வைரஸ்” : ஆனால் கவலை வேண்டாம் – MOH சொல்வதென்ன?

சிங்கப்பூருக்கு வெளிநாடுகளில் இருந்த வந்த ஒருவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) நிலவரப்படி AY.4.2 டெல்டா துணை மாறுபாட்டைக் கொண்ட வைரஸ் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை இரவு தெரிவித்துள்ளது. AY.4.2 டெல்டா துணை மாறுபாடு என்பது பெருந்தொற்று டெல்டா மாறுபாட்டின் பிறழ்வு ஆகும். இது AY.4 டெல்டா மாறுபாடு மற்றும் S:Y145H ஸ்பைக் பிறழ்வு ஆகியவற்றின் கலவையாகும்.

நல்வாய்ப்பாக இந்த வழக்கில் இருந்து சமூகத்தில் இந்த் வகை வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த வகை வைரஸின் “விளைவுகள் இன்னும் ஆய்வு செய்யப்படுகையில், AY.4.2 தற்போது மற்ற டெல்டா துணை மாறுபாடுகளைப் போலவே பரவும் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”, என்று அமைச்சகம் மேலும் கூறியது.

இந்த துணை மாறுபாடு உலக சுகாதார நிறுவனத்தால் ஆர்வத்தின் மாறுபாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் நாம் கவலைகொள்ளும் வகையிலான மாறுபாடு அல்ல என்ற நிம்மதி தரும் செய்தியையும் தெரிவித்துள்ளது அமைச்சகம். நிபுணர்களின் கூற்றுப்படி, புதிய மாறுபாடு டெல்டாவை விட அதிக தொற்று அல்லது ஆபத்தானது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று BBC தெரிவித்துள்ளது, இருப்பினும் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.

GISAID வழங்கிய அறிக்கை தரவுத்தளத்தின் தரவு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த துணை மாறுபாட்டின் வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதைக் காட்டுகிறது.

Related posts