சிங்கப்பூரில் வரும் 2030க்குள் தீவு முழுவதும் உள்ள போலீஸ் கேமராக்களின் எண்ணிக்கையை 90,000லிருந்து குறைந்தது 2,00,000 ஆக உயர்த்த உள்ளது. நேற்று ஆகஸ்ட் 3ம் தேதி நடந்த நாடாளுமன்ற அமர்வின்போது உள்துறை அமைச்சர் கே. சண்முகம், இந்த கேமராக்கள் வழக்குகளை கண்டறியவும், தடுக்கவும், தீர்க்கவும் உதவும் என்று கூறினார்.
சட்ட அமைச்சராக இருக்கும் சண்முகம், கேமராக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் செயலாற்றும் விதம் என்பது மாறுபடுவதில்லை என்று கூறினார். “கருத்தியல் ரீதியாக, பொது இடங்களில் கேமராக்களை வைத்திருப்பதால், என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த காவல்துறையினர் நேரில் கண்ட சாட்சிகளை நேர்காணல் செய்வதில் இருந்து வேறுபட்டதல்ல,” என்றும் அவர் கூறினார்.
கண்காணிப்பு கேமராக்கள் மக்களின் தனியுரிமையை ஆக்கிரமிப்பதாக விமர்சனம் செய்பவர்கள், பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான சூழலில் வாழ விரும்புவதை கவனிக்கவில்லை என்றும். போலீஸ் கேமராக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் வைக்கப்படும் போது மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் திரு. சண்முகம் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு முதல் 90,000க்கும் மேற்பட்ட போலீஸ் கேமராக்கள் பொது இடங்களான ஹவுசிங் எஸ்டேட், அண்டை மையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இவரை வரும் 2030ம் ஆண்டுக்குள் 2,00,000 ஆக உயர்த்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.