சிங்கப்பூரில் பெண் ஒருவர், தான் வாங்கிய Boneless கோழி இறைச்சி பாக்கெட்டின் விலை சுமார் 36 சதவீதம் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த பேக்கேஜில் உள்ள FairPrice Xtra லேபிளில் 0.224 கிலோ எடையும் அதற்குரிய விலை $2.42 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வீட்டிற்கு வந்து எடை தராசில் சோதனை செய்தபோது, வெறும் 0.165 கிலோ எடை மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கும் pre-packaged உணவின் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் சந்தேகம் இருந்தால், அதன் எடையை தாங்களாகவே சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் (CASE) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து CNA கேள்விகளுக்கு பதிலளித்த சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம், NTUC FairPrice அல்லது வேறு எந்த பல்பொருள் அங்காடிகளிலும் உணவுப் பொருட்களின் “தவறான முத்திரை” குறித்து எந்த புகாரும் வரவில்லை என்று கூறியுள்ளது.
முன்னதாக இந்த சம்பவங்களுக்கு NTUC FairPrice சூப்பர் மார்க்கெட்நிறுவனம் மன்னிப்புக் கேட்டதோடு, இந்த “mislabelling” குறித்து விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
முன்னதாக தங்கள் பொருட்களின் எடை அளவுகள் “அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களால் அளவீடு செய்யப்படுகின்றன” என்று FairPrice கூறியிருந்தது. மேலும் அவை வருடாந்திர அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு வருடத்திற்கு இரண்டு முறை பராமரிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் கூறியது.
மேலும், அது கூடுதல் நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் தெரிவித்தது. அதாவது, அதன் அனைத்து கடைகளும் தங்கள் தினசரி வியாபாரத்தை தொடங்குவதற்கு முன் தினசரி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்தது.
“ஏற்கனவே லேபிளிடப்பட்ட புதிய தயாரிப்புகள் லேபிளின் துல்லியத்தை உறுதிப்படுத்த எடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று FairPrice தெரிவித்துள்ளது.
CASE தலைவர் Melvin Yong, Radin Mas இன் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட, FairPrice இந்தச் சம்பவம் மனிதப் பிழையால் ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
FairPrice வழங்கும் உறுதிமொழிகளை CASE வரவேற்றது. அவற்றின் எடை அளவீடுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளன, மேலும் “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க” கூடுதல் நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும், pre-packaged செய்யப்பட்ட பொருட்களை வாங்கும் போது அங்கேயே எடைபோட்டு சரிபார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
“லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அதனை கடையிலேயே சரிபார்த்து விடுங்கள்” என்று அவர் கூறியுள்ளார். பொருட்களை எடைபோடுவதற்கு முன்பு எடையிடும் கருவி ‘பூஜ்யம்’ என்பதைக் குறிக்கிறது என்பதையும் பொதுமக்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று CASE தலைவர் Melvin Yong தெரிவித்துள்ளார்.