சிங்கப்பூர் மட்டுமின்றி உலக அளவில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் வாழ்க்கை முறை சேவை துறையில் உள்ள நிறுவனங்கள், மீண்டும் மீண்டு வர தற்போது உதவிகளை பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் மேலும் 18 தொழில் மாற்ற திட்டங்கள் இதற்காக சிங்கப்பூரில் தொடங்கப்பட்டன.
இந்த திட்டங்கள் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தொழிலாளர்களை சித்தப்படுத்துவதற்கும், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கும் உதவுகின்றன என்று மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் Singapore Work Force (WSG) இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் நடுப்பகுதி வரை, 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 3,100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அதேபோல கடந்த 2019ல் 40 நிறுவனங்களில் இருந்து 110 பணியாளர்கள் வரை இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மொத்தத்தில், சுற்றுலா மற்றும் வாழ்க்கை முறை சேவைத் துறைக்கு இதுபோன்ற 23 திட்டங்கள் இப்போது உள்ளன.
இந்தத் திட்டங்கள் இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை மேலும் 1,400 தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். தொற்றுநோய் காரணமாக இந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை முடுக்கிவிட வேண்டும் என்று MOM மற்றும் WSG தெரிவித்துள்ளது.