TamilSaaga

சிங்கப்பூரில் ஒரேயொரு தடுப்பூசி போட்டிருக்கும் ஊழியர்கள்.. சொந்த ஊர் சென்றுவிட்டு மீண்டும் சிங்கப்பூர் திரும்ப முடியுமா?

பெருந்தொற்றுக்கு ஒரேயொரு தடுப்பூசி மட்டும் போட்டிருந்தால், இந்தியா சென்றுவிட்டு மீண்டும் சிங்கப்பூர் வர முடியுமா என்பது சிங்கப்பூரில் பணிபுரியும் பல ஊழியர்களின் சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து நமது தமிழ் சாகாவிடம் சில வாசகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவர்களுக்கு நாம் தனிப்பட்ட முறையில் பதில் அளித்திருந்தோம். இந்நிலையில், அந்த பதிலை சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை செய்தியாக வெளியிடுகிறோம்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் OIL & GAS ROTATING EQUIPMENT பிரிவில் வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை – 1400 வெள்ளி வரை சம்பளம் – OT உண்டு

சிங்கப்பூரில் பணிபுரியும் Work Permit Holders, S-Pass Holders என யாராக இருந்தாலும் ஒரு தடுப்பூசி மட்டும் செலுத்தி இருந்தால் இந்தியா சென்றுவிட்டு மீண்டும் சிங்கப்பூர் திரும்ப முடியாது. இவ்வளவு ஏன்.. சிங்கப்பூரின் PR-கள், சிங்கப்பூர் சிட்டிசன்கள் கூட ஒரேயொரு மட்டும் தடுப்பூசி செலுத்தி இந்தியா சென்றுவிட்டு மீண்டும் சிங்கப்பூர் வர நினைத்தால் முடியாது. அவ்வளவு கெடுபிடி உள்ளது.

12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், கட்டாயம் 2 தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே சிங்கப்பூர் திரும்ப முடியும். இதுதான் விதிமுறை. அது VTL விமானங்களாக இருந்தாலும் சரி.. non-VTL விமானங்களாக இருந்தாலும் சரி.. 2 தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் ஏர்லைன்ஸ் அனுமதிக்கும். இல்லையெனில், அவர் சிங்கப்பூரின் சிட்டிசனாக இருந்தாலும் “வாய்ப்பில்ல ராஜா” தான்.

Source: Nandana Air Travels, Trichy

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts