TamilSaaga

“சிங்கப்பூர் பிஷன் சாலை, பிராடெல் சாலை சந்திப்பு” : சாலையில் ஏற்பட்ட தீ – விரைந்து வந்த SCDF

சிங்கப்பூரில் பிஷன் சாலை மற்றும் பிராடெல் சாலை சந்திப்பில் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 7) காலை தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) காலை 6.50 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதாகக் கூறியது. SCDF அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​சாலை டிவைடரில் இருந்த புதர்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். சுமார் 2 மீ முதல் 3 மீ பரப்பளவு கொண்ட தீயாக அது இருந்தது என்று அவர்கள் கூறினார்கள்.

விரைந்து செயல்பட்ட அவர்கள் தண்ணீர் ஜெட் மூலம் தீயை அணைத்தனர். இந்த தீச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று SCDF தெரிவித்தது. தீக்கான கரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில், SCDFக்கு வரும் சில அவரச அழைப்புகளை அடுத்து, அந்த இடத்திற்கு SCDF செல்வதற்கு முன்பாகவே பல அவசர வழக்குகளில் பொதுமக்களால் விரைவாகக் அந்த வழக்குகளை கவனிக்க முடியும்.

உதாரணமாக, 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு வெளியே நெஞ்சு வழியால் (OHCA) பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் உயிர்வாழும் விகிதம் வெறும் 5%மட்டுமே. ஆனால் இதுபோன்ற நிலைகளில், முதல் சில முக்கியமான நிமிடங்களில் எளிய மருத்துவ தலையீட்டால் இந்த பிரச்னையை மேம்படுத்தப்படலாம். அதே நேரத்தில், 1,000-க்கும் மேற்பட்ட சிறு தீக்காயங்கள் (குப்பைத் தொட்டி நெருப்பு போன்றவை) பொதுவில் கிடைக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி எளிதில் அணைக்க முடியும்.

Related posts