சிங்கப்பூரில் SBS பேருந்து போக்குவரத்து ஓட்டினராக பணிபுரியும் நபரை மக்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் பாராட்டி வருகின்றனர்.
அவர் அன்பால் செய்த ஒரு செயல் மிகப்பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது. அவர் செய்த ஒரு நல்ல செயலை இப்ராஹிம் என்பவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி இப்ராஹிம் பேருந்து எண் 154ல் பயா லெபர் எம்.ஆர்.டி பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது ஜூ சியண்ட் காம்ப்ளக்ஸ் அருகே வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரமாக நின்றது.
பேருந்தில் இரண்டு பேர் ஏறிய பிறகும் புறப்படமல் அங்கேயே நிற்பதை பார்த்து இப்ராஹிம் ஆச்சர்யமடைந்தார்.
திடிரென பேருந்து ஓட்டுனர் அதன் கதவுகளை திறந்தார். அவர் தனது எதோ ஒரு வேலையை செய்யும் நோக்கத்தில் திறக்கிறார் என நினைத்த தருணத்தில் தான் அனைவருக்கும் புரிந்தது.
தனது இருக்கைக்கு அருகில் பேருந்துக்கு வெளியே ஒரு வயதான நபர் ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் டிஷ்யூ பேப்பர்களை விற்பனை செய்துகொண்டு அமர்ந்திருந்தார்.
உடனடியாக பேருந்தை விட்டு இறங்கிய ஓட்டுனர் அந்த டிஷ்யூ பேப்பர் வியாபாரியான வயதானவரின் அருகில் சென்று அவரின் சட்டைப் பையில் ஏதோ வைத்துவிட்டு வந்தார். பின்பு உடனடியாக அவர் பேருந்தை இயக்கி ஓட்டத் துவங்கினார். இதனை இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மனிதாபிமானமிக்க அன்பான செயலை தனது முகநூலில் பதிவிட்டு நெகிந்துள்ளார் இப்ராஹிம். சமூக வலைதளம் முழுதும் அந்த ஓட்டுனரையும அவர் செயலையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Photo Credit : Ibrahim / FB