TamilSaaga

சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு.. உணவு சாப்பிட்ட 17 பேருக்கு உடல்நலக் கோளாறு – அவசர அவசரமாக இழுத்து மூடப்பட்ட ரெஸ்டாரண்ட்

Jewel சாங்கி விமான நிலையத்தில் உள்ள Burger & Lobster ரெஸ்டாரண்ட் நேற்று (மே 16) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், மே 7 மற்றும் 15ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த உணவகத்தில் சாப்பிட்டவர்களில் மொத்தம் 17 பேருக்கு இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) ஆகியவை இந்த வழக்குகளை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளன.

17 பேரில், நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் Straits times செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற மூன்று நோயாளிகள் Stable Condition-ல் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – கரூர் ‘டூ’ சிங்கப்பூர்… அரசு பள்ளியில் படித்து சிங்கையில் சாதித்த தமிழர் – உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெருமை!

மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் நிறுவப்பட்ட Burger & Lobster சிங்கப்பூரில் இரண்டு விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.

மே 2019ம் ஆண்டு, jewel சாங்கி விமான நிலையத்தில் முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியது. இரண்டாவது விற்பனை நிலையம் ராஃபிள்ஸ் ஹோட்டலில் உள்ளது.

அதேசமயம், jewel சாங்கி விமான நிலைய விற்பனை நிலையத்திற்கான முன்பதிவில் “தொழில்நுட்பச் சிக்கல்கள்” ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவகம் மூடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மூடப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts