சிங்கப்பூரில் மத்திய இயற்கை பூங்கா குழுமம் மற்றும் தெங்கா வனப்பாதையை இணைக்கும் இயற்கை நடைபாதையின் ஒரு பகுதியாக புக்கிட் கோம்பக்கில் ஒரு புதிய பூங்கா இன்று ஞாயிற்றுக்கிழமை (செப் 5) திறக்கப்பட்டுள்ளது. ஒரு மலையில் அமைந்துள்ள இந்த பூங்கா, கடல்மட்டத்தில் இருந்து சுமார் 45 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 4.8 ஹெக்டேர் அளவு கொண்டது இந்த பூங்கா என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட்டாம்பூச்சி தோட்டம் ஒன்றும் இந்த பூங்காவின் மிக உயர்ந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் தாவரங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வகையான பட்டாம்பூச்சிகள் இங்கு உள்ளன. சுற்றியுள்ள காடு மற்றும் பசுமையின் காட்சியை வழங்கும் இந்த இடத்தை அடைய 108 படிகள் கொண்ட ஒரு சாய்ந்த 400m-looped மலைப் பயணத்தை மக்கள் மேற்கொள்ளவேண்டும்.
அதில் கூடுதலாக 480 சதுர மீட்டர் தூரம் நாய்களை வாக்கிங் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி உள்ளது, 5.3 மீ நீளமுள்ள ஸ்லைடு நிலப்பரப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் புதர்களுக்கு இடையில் சமநிலைப்படுத்தும் கற்றைகள் போன்ற இயற்கையால் ஈர்க்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் இதில் உள்ளன.
உடற்பயிற்சி உபகரணங்களுடன் வெளிப்புற உடற்பயிற்சி பகுதி, நிகழ்வுகளுக்கான திறந்த புல்வெளி மற்றும் ஒரு கஃபே – விஸ்க் மற்றும் பேடல் ஆகியவை உள்ளன. NParks இந்த பூங்காவில் ஒரு சமூக நர்சரி அமைக்க திட்டமிட்டுள்ளது. இது OneMillionTrees இயக்கத்திற்கு பங்களிக்கும் – 2030க்குள் 1 மில்லியன் மரங்களை நடும் அரசின் திட்டம் அதுவென்பது குறிப்பிடத்தக்கது.