சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு 3 வது தடுப்பூசி செலுத்தலாமா என்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது என அமைச்சுகளுக்கான பணிக்குழு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தடுப்பூசி போட துவங்கப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவங்க வாய்ப்புள்ளதாக பணிக்குழுவின் இணைத்தலைகர் ஓங் யி காங் தெரிவித்தார்.
“மற்ற நாடுகளின் தடுப்பூசி செயல்பாடுகளை பார்த்து தான் அதனை நாம் செயல்படுத்தி வந்தோம் பூஸ்டர் தடுப்பூசி விடயத்தில் மற்ற நாடுகளிடம் கற்ற பாடத்தில் இருந்து நாம் செயல்பட வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளில் சிங்கப்பூர் நிபுணர் குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.