சிங்கப்பூரில் யூத ஆலயத்தில் கத்திக் குத்து நடத்த திட்டமிட்ட ஒரு நபரிடம் அதுகுறித்து விசாரணை நடத்தியது காவல்துறை.
அப்போது 20 வயதான அந்த நபர் கடந்த 2015ல்
“Uncovering the secrets of the Izz Ad-Din Al Qassam Brigades Elite Force” என்ற புத்தகத்தை வாங்கி படித்ததாகவும் அதனால் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஈர்க்கப்பட்டதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த புத்தகமானது வெவ்வேறு சமயங்களுக்கு இடையேயான விரோதத்தை வளர்க்கும் வகையில் இருப்பதால்அந்த புத்தகத்தை தடை செய்வதாகவும் தகவல் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதனையடுத்து அந்த புத்தகத்தை வைத்திருப்பவர்கள் அதனை திருப்பி அளிக்க வேண்டுமென காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.