சிங்கப்பூர் : சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் அனைவருக்கும் இருக்கும். ஆனால் எந்த மாதத்தில் சென்றால் அங்கு தட்பவெப்பநிலை சரியாக இருக்கும்? எந்த மாதத்தில் சென்றால் உற்சாகமாக சுற்றுலாவை அனுபவிக்கலாம்? குறிப்பாக எந்த மாதங்களில் சென்றால் சிங்கப்பூர் சென்று திரும்புவதற்கான செலவு பாதியாக குறையும் அல்லது குறைந்த விலையில் சென்று விட்டு வரலாம் என்ற விபரங்கள் பலருக்கும் தெரியாது. சிங்கப்பூருக்கு டிரிப் பிளான் செய்வதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு புறப்பட்டால், குறைந்த விலையில் நிறைவான பயணத்தை அனுபவிக்கலாம்.
ஊர் சுற்றி பார்ப்பதற்கு என்றால் சிங்கப்பூர் நல்ல நாடு தான். ஆனால் உலகில் உள்ள காஸ்ட்லியான நகரங்களில் இதுவும் ஒன்று. மற்ற சர்வதேச நகரங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் விலை மிகவும் அதிகம். தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூர் செல்வதற்கு பதிலாக பக்கத்தில் உள்ள வேறு நாடுகளுக்கு சென்று விடலாம் என்பதே சுற்றுலா பயணிகள் பலரின் கருத்தாக உள்ளது.
சிங்கப்பூரில் எப்போது கூட்டம் குறைவாக இருக்கும் ?
சிங்கப்பூர் செல்வதற்கு ஏற்ற மாதம் என்றால் அது மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள் தான். இந்த மாதங்களில் சென்றால் மழை, குளிர் ஆகியவை குறைவாக இருக்கும். இதனால் காலநிலை நிலவுவதால் ஊர் சுற்றி பார்க்க ஜாலியாக இருக்கும். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் சிங்கப்பூரில் சூப்பராக சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்ற மாதங்கள் என்றால் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலம் தான். ஜூலை முதல் நவம்பர் வரை சிங்கப்பூரில் சுற்றுலா வரும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும்.
விமான பயண செலவு :
உலகம் முழுவதிலும் உள்ள 100 விமான சேவை நிறுவனங்கள் சிங்கப்பூரில் உள்ள நான்கு முனையங்களுக்கு விமானங்களை இயக்குகின்றன. இவற்றில் பல விமான நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில், சலுகை விலையில் டிக்கெட்கள் விற்பனை செய்கின்றன. இதனால் ஒரே டிக்கெட்டில் சிங்கப்பூரில் உள்ள பல நகரங்களுக்கும் சென்று வர முடியும். Singapore – Changi விமான நிலையத்தில் long layover சேவை உள்ளது. மூன்று மணி நேரம் வரையிலான பயணத்திற்கு இதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சிங்கப்பூருக்கு வருவதாக இருந்தால் பகலில் வந்தால் செலவு குறையும். இரவு நேரங்களில் பொது போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் நள்ளிரவு நேரங்களில் இயக்கப்படும் டாக்சிக்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதுண்டு.
ஓட்டலில் தங்குவதற்கான செலவுகள் :
சிங்கப்பூரில் ஓட்டலில் தங்குவதற்கான கட்டணம் மிக அதிகம். இதை தவிர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் முக்கிய நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அறைகளை புக் செய்யலாம். சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை மாதங்களான ஜூன், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் சிங்கப்பூர் வருவதை தவிர்க்கலாம். சிங்கப்பூரின் பொது விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் உங்களின் சிங்கப்பூர் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
உணவிற்கான செலவு :
சிங்கப்பூரில் குறைந்த விலையில், சுவையான, உங்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப, நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட வேண்டுமானால் hawker centers களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இதை தவிர்த்து தெருவோர உணவுக் கடைகள், கையேந்தி பவன் போல் பல கடைகள் உள்ளன. இங்கெல்லாம் சென்று சாப்பிட ஆசைப்பட்டால் பட்ஜெட் எகிறி விடும்.
மதுபானங்கள் அருந்த :
மதுபானங்களுக்கு சிங்கப்பூரில் வரி மிக அதிகம். பப்புகள் போன்றவற்றில் 15 முதல் 20 சிங்கப்பூர் டாலர்கள் வரை செல்வாகும். ஒரு கிளாஸ் 40 டாலர்கள் வரை விற்பனையாகும். இதனால் இதில் பணம் தண்ணீராக செலவாகாமல் இருக்க hawker centers அல்லது சூப்பர் மார்க்கெட்களில் மதுபானங்கள் அருந்துவது சிறந்தது. அதுவும் இரவு 10.30 மணிக்கு முன்பு அருந்துவது சிறந்தது. இரவு நேரங்களில் மதுபானம் அருந்த சென்றால் அதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
செலவுகளை குறைக்க ஈஸியான வழிகள் :
- சிங்கப்பூரில் ஊர் சுற்றிப் பார்க்க டாக்சிகளுக்கு பதிலாக பொது போக்குவரத்துகளை பயன்படுத்துங்கள்.
- நகரத்தை விட்டு வெளியில் அறைகள் எடுத்து தங்குவதால் தங்குவதற்கான செலவு குறையும்.
- அதுவும் விமான நிலையம், MRT stations ஆகியவற்றிற்கு அருகில் தங்கினால் போக்குவரத்திற்கான செலவு குறையும்.
- உங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட்களை தவிர்த்து சிறிய கடைகளை தேர்வு செய்வது செலவை குறைக்கும்.
- சிங்கப்பூரில் குடிப்பதற்கு குடிநீர் பாட்டில்கள் வாங்குவதை விட குழாய் தண்ணீர் குடிப்பது செலவும் குறைவு. பாதுகாப்பானதும் கூட.
- சிங்கப்பூரில் எந்தெந்த இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என முன்பே திட்டமிட்டுக் கொண்டு சென்றால் செலவை பெருமளவு குறைக்கலாம்.