TamilSaaga

“வரலாற்று வெற்றியை பதிவு செய்தது சிங்கப்பூர்” – இந்திய வீரரை வீழ்த்தி சிங்கப்பூரின் லோ கீன் சாதனை

BWF உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் சிங்கப்பூர் வீரர் என்ற சாதனையைப் படைத்ததன் மூலம், சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீரர் லோ கீன் இயூ வரலாற்றுப் புத்தகத்தில் தனது பெயரை அழுத்தமாக பதித்துள்ளார். ஸ்பெயினின் ஹுல்வாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் 22-ஆம் நிலை மாற்றும் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினார் நமது சிங்கப்பூர் சிங்கம்.

இதையும் படியுங்கள் : 400க்கும் மேற்பட்ட “தமிழர்களை” உடனே நாட்டை விட்டு வெளியேற்றிய சிங்கப்பூர் அரசு – காரணம் என்ன?

போட்டியில் தரவரிசை பெறாத லோ, உலகின் முதல் நிலை வீரரான விக்டர் ஆக்செல்சன் மற்றும் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆண்டன்சன் போன்றவர்களை தனது மகுடத்தை கைப்பற்றும் வழியில் வெற்றிகொண்டுள்ளார் என்பது சிங்கப்பூரர்கள் பெருமைகொள்ளும் விஷயமாக உள்ளது. இந்த போட்டியானது இரு வீரர்களுக்கும் இடையிலான இரண்டாவது நடக்கும் போட்டியாகும். சென்ற முறை இந்த ஜோடி மோதியபோது உலகின் 14வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்தை லோ தோற்கடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்தியாவின் ஸ்ரீகாந்தின் கைதான் ஓங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நமது சிங்கப்பூர் வீரரை போல இந்தியாவிற்கும் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வானது இதுவே முதல் முறை என்பது தான் இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் பிற்பகுதியில் சிங்கப்பூர் வீரர் லோ அதிக புள்ளிகளை எடுக்க தொடங்கினர். முடிவில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்தை 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினார். உலக சாம்பியன்ஷிப்பின் முந்தைய பதிப்பில், லோ, சௌ தியென்-செனிடம் நாக் அவுட் செய்யப்படுவதற்கு முன்பு கடைசி 16-ல் இடம்பிடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts