SINGAPORE: தனது கர்ப்பிணி மனைவி மற்றும் நான்கு வயது மகளைக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் property agent-க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் இன்று (பிப். 23) உறுதி செய்தது.
தியோ கிம் ஹெங் (வயது 46) என்பவர் தனது ஆறு மாத கர்ப்பிணி மனைவி சூங் பெய் ஷான் (39 மற்றும் மகள் ஜி நிங் ஆகியோரை உட்லண்ட்ஸ் குடியிருப்பில் கடந்த ஜன 20, 2017ல் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
அதுமட்டுமின்றி ஒருவாரமாக சடலங்களுடன் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.
இதுகுறித்து நடந்து வந்த வழக்கில், கீழ் நீதிமன்றம் தியோவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று (பிப்.23) ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தியோவின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது. தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதன் காரணமாகவே கொலை நடைபெற்றதாக தியோ சார்பில் வாதிடப்பட்டது.
தண்டனைச் சட்டத்தில் உள்ள இரண்டு கொலைகள் தொடர்பான விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும் தியோ வாதிட்டார், ஏனெனில் அவை தண்டனைகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை அரசுத் தரப்புக்கு திறம்பட வழங்கின என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜூடித் பிரகாஷ், தியோ பெரிய மனச்சோர்வுக் கோளாறால் பாதிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்த கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று தண்டனையை உறுதிப்படுத்தினார்.
தியோ மற்றும் மேடம் சூங் 2009 இல் திருமணம் செய்து கொண்டனர்.
தியோ ஒரு வெற்றிகரமான property agent-ஆக இருந்தார், ஆனால், 2015 இல், Market-ல் ஏற்பட்ட சரிவு காரணமாக அவரது வருமானம் குறைந்தது.
2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அவர் ஒரு renovation நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக மற்றொரு வேலையைப் பார்க்கத் தொடங்கினார். ஆனால் தியோவுக்கு சூதாட்டப் பழக்கம் இருந்ததால் குடும்பச் செலவுகள் மாறாமல் அப்படியே இருந்தது.
2016 ஆம் ஆண்டின் இறுதியில், அவர் சுமார் $120,000 கடனில் சிக்கித் தவித்தார், மேலும் அவர்களது குடியிருப்பை விற்பனைக்கு விடுவதாகவும் அறிவித்தார்.
ஜனவரி 18, 2017 அன்று, குடும்பத்தில் வருமானம் தொடர்பாக தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. ஜனவரி 20, 2017 அன்று காலை, மகள் டியோ ஜி நிங்கைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்தார், ஏனெனில் அவரது கல்விக் கட்டணம் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது.
இதனால் மேடம் சூங் கணவர் தியோவை “நீங்கள் எதற்கும் லாயக்கற்றவர்” என்று திட்டியிருக்கிறார்.
இதனால் தகராறு முற்றிப்போக, கனைவியை குளியல் துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்பு மகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
தியோவின் இரட்டைக் கொலைத் தண்டனைக்குப் பிறகு, அவரது பிறக்காத மகனைக் கொன்ற மூன்றாவது குற்றச்சாட்டுக்காக வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், தற்போது சிங்கப்பூரின் மேல் நீதிமன்றத்தாலேயே மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.