TAMILNADU: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரில் இயங்கும் அண்ணாமலை ஆர்மி எனும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து குஜராத் அரசு மருத்துவமனை என ஒளி மின்னும் ஆடம்பர கட்டிடம் ஒன்றின் புகைப்படமானது பதிவிடப்பட்டிருந்தது.
தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை பெயரில் ஒரு ட்விட்டர் பக்கம் ஒன்று இயங்கிய வருகிறது. அதன் பெயர் அண்ணாமலை ஆர்மி. இந்நிலையில், அந்த ட்விட்டர் பக்கத்தில், குஜராத் அரசு மருத்துவமனை என்ற Caption-னுடன் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.
பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமாக இருந்த அந்த கட்டிடத்தை அந்த டீவீட்டில் பலரும் ஷேர் செய்து பாராட்டி இருந்தனர்.
ஆனால், அந்த புகைப்படத்தில் இருக்கும் கட்டிடம் நமது சிங்கப்பூரின் பிரம்மாண்டமான மெரினா பே ஹோட்டல் தான். இதைத் தான் குஜராத் அரசு மருத்துவமனை என்று ட்வீட் செய்துள்ளனர்.
இதை பதிவிட்ட அண்ணாமலை ஆர்மியின் ட்விட்டர் பேஜ் குறித்து ஆராய்கையில், அதன் பெயர் @KarthikGnath420 என இடம்பெற்று உள்ளது. பிறகு தான், இது ஒரு ட்ரோல் பேஜ் என்பது தெரியவந்தது. பாஜக மற்றும் வலதுசாரிகளை கிண்டல் செய்யும் நோக்குடன் தொடங்கப்பட்ட பேஜ் இது.
அதில், வேண்டுமென்றே கிண்டலாகத்தான் நமது மெரினா பே ஹோட்டலை குஜராத் அரசு மருத்துவமனை என்று ட்வீட் செய்துள்ளனர். அது தெரியாமல், ஊடகவியலாளர்கள், இடதுசாரிகள் என பலரும், அந்த டீவீட்டை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் அது அண்ணாமலையை கிண்டல் செய்வதற்காக வெளியிட்ட பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.