கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 4) அன்று புதுப்பிக்கப்பட்ட பயண சுகாதார அறிவிப்பில் சிங்கப்பூரில் COVID-19ன் அளவு “குறிப்பிடப்படாத நிலையின் கீழ் வைக்கின்றோம்” என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) எச்சரித்துள்ளது. “சிங்கப்பூரின் தற்போதைய நிலைமை தெரியாததால், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட COVID-19 வகைகளைப் பெறுவதற்கும் பரப்புவதற்கான ஆபத்தில் இருக்கக்கூடும்” என்று CDC தெரிவித்துள்ளது.
மேலும் CDC வெளியிட்ட அறிக்கையில், சிங்கப்பூர் பயணத்தைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியது. “நீங்கள் சிங்கப்பூருக்குப் பயணம் செய்ய வேண்டும் என்றால், பயணத்திற்கு முன் நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று அது மேலும் கூறியது. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பிற உத்தியோகபூர்வ ஆதாரங்களால் அறிவிக்கப்பட்ட COVID-19 தரவை CDC அதன் வலைத்தளத்தின்படி, பயண சுகாதார அறிவிப்பு நிலைகளை தீர்மானிக்க பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒரு நாடு இதுகுறித்த தரவை வழங்கவில்லை என்றால், அவர்களின் பயண சுகாதார அறிவிப்பு நிலை ‘Unknown’ என குறிப்பிடப்படுகிறது மற்றும் பயணிகள் பயண சுகாதார அறிவிப்பு நிலை 4 பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று CDC தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், கம்போடியா, வட கொரியா மற்றும் சிரியா ஆகியவை கோவிட்-19ன் “Unknown” என்ற கொண்டிருப்பதாக US CDC வகைப்படுத்தியுள்ளது.
CDCயின் பயண சுகாதார அறிவிப்பு அமைப்பில் சிங்கப்பூர் முன்பு அதிக ஆபத்துள்ள பிரிவில் இருந்தது. இது நிலை 4 இல் வைக்கப்பட்டது, இது கடந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.