TamilSaaga

கோடிக்கணக்கான சொத்துக்களை உதவி தள்ளிவிட்டு துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த aircel ஓனரின் மகன்… காரணம் தெரியுமா?

ஒரு காலத்தில் செல்போன் சிம் கார்டு நிறுவனத்தில் இந்தியாவில் கொடி கட்டி பறந்த நிறுவனம் தான் aircel எனப்படும் நிறுவனம். சிம் கார்டு என்றாலே ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகிய பெயர்கள் தான் ஞாபகத்திற்கு வரும். அந்த நிறுவனத்தின் அதிபர் ஆனந்த கிருஷ்ணன் என்பவர் ஆவார். இவர் மலேசியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தனது தொழில்களின் மூலம் பல்லாயிரம் கோடி சொத்துக்களை வைத்துள்ளார். தற்பொழுது இவரின் சொத்து மதிப்பு 40,000 கோடி ஆகும். இவரது இத்தனை சொத்துக்களுக்கும் இவருடைய ஒரே ஆண்மகன் தான் வாரிசு.பொதுவாக தொழிலதிபரின் மகன்கள் என்றால் தந்தையின் தொழிலை பின்பற்றி பல்வேறு புதிய பிசினஸ்களில் ஈடுபடுவர். ஆனால் இவரது மகன் வென் ஆஜன் என்பவர் துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விரும்பியுள்ளார் இவரது தந்தையான ஆனந்த் கிருஷ்ணனும் புத்த மதத்தைச் சேர்ந்தவர் தான்.
என்ற
தொழிலதிபராக இருந்த பொழுதும் தன்னால் என்ற உதவிகளை பலருக்கு செய்தவர். நம் ஊர்களில் லட்சக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருந்தாலே அதை காப்பதற்கு உயிரைக் கூட பறிக்க திட்டமிடும் நபர்களின் மத்தியில் 40000 கோடி சொத்தை துறந்து இந்த உலக வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை புரிய வைத்துள்ளார் இவர்.

Related posts