Air India Express நிறுவனம் சிங்கப்பூருக்கான VTL விமான சேவையை அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் மார்ச். 27 முதல் சென்னையில் இருந்தும், மதுரையில் இருந்தும் சிங்கப்பூருக்கு VTL விமானங்கள் இயக்கப்படும் என்று Air India Express அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரம் இரு முறையும் (IX688), அதேபோல், மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரம் இருமுறையும் (IX684) விமானங்கள் இயக்கப்படும் என்று அந்நிறுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து வழக்கம் போல non-VTL விமான சேவையே தொடரும் என்றும் Air India Express குறிப்பிட்டுள்ளது.