TamilSaaga

சிங்கப்பூர் to தமிழகம்… சூப்பரான ஆஃபரை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – மிகக் குறைந்த விலையில் டிக்கெட் கட்டணம்

SINGAPORE: தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூரில் இருந்து தமிழகம் என்று இந்த இரு வழி மார்க்கத்திற்கு எப்போதும் டிமாண்ட் அதிகம். பயணிகள் அதிகம் பேர் பயணிக்கக் கூடிய நாடாக சிங்கப்பூர் உள்ளது.

இதில், வேலை காரணமாக பயணிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். இதன் காரணமாக டிக்கெட் விலை சில சமயங்களில் குறைவாகவும், சில நேரங்களில் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகமாகவும் இருக்கும்.

இந்த சூழலில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இரு மார்க்கமாக மிகக் குறைந்த விலையில் டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் முதன் முதலில் வந்திறங்கிய “பெரியார்”.. புது Rolls-Royce கார் வாங்கி அழைத்துச் சென்ற “பெரிய பழுவேட்டரையர்” சரத்குமாரின் தாத்தா – வரலாறு!

அதன்படி, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்கள் விமானம் இயக்கப்படும் என்றும், இதன் கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பின் படி, 10,168-லிருந்து தொடங்கும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. அதே சமயம், இந்த கட்டணம் பயணிகளின் டிமாண்ட் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 10,168 என்பது ஆரம்ப விலையே தவிர, நிலையான விலை கிடையாது என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

அதுபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் விமானம் இயக்கப்படும் என்றும், இதன் கட்டணம் 162 சிங்கப்பூர் டாலரில் இருந்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமும், பயணிகளின் டிமாண்ட் பொறுத்து மாறுபடலாம்.

சிங்கப்பூர் – திருச்சி

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சி மற்றும் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் என்று இருமார்க்கமாக டிக்கெட் கட்டணம் ரூ.10,500-ல் இருந்து தொடங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. இந்த கட்டணமும் பயணிகளின் டிமாண்ட் பொருத்து மாறுபடும்.

மீண்டும் சொல்கிறோம்.. இந்த கட்டணம் அனைத்தும் ஆரம்ப விலையே தவிர, நிலையான கட்டணம் கிடையாது என்பதை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெளிவுப்படுத்துகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts