தொற்றுநோயால் பலமடங்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிங்கப்பூரின் Aero Space தொழில் மெதுவாக மீண்டும் முன்னேற்றமடைய தொடங்கியுள்ளது. அந்த துறை சார்ந்த நிறுவனங்கள் தற்போது மீண்டும் வேலைக்கு ஆட்களை அமர்த்தி வருகின்றனர். உலகின் சில பகுதிகளில் பயணத் தொடக்கம் மற்றும் தடுப்பூசி வெளியீடு தொடர்ந்து முன்னேற்றம் அடைவதால் நடிப்பில் உள்ள மோசமான நிலை முடிவடையும் என்று தொழில்துறை அறிஞர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த தொழில்துறை மீட்புக்கான பாதை சற்று கடினமானதே என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஒரு தொழில்துறை நிகழ்வில் பேசும்போது “சிங்கப்பூரில் உள்ள Aero Space தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1,000 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக” அறிவித்தார். அவற்றில் அமெரிக்க Aero Space தொழில் சார்ந்த உபகரண உற்பத்தியாளர் ப்ராட் அண்ட் விட்னி, இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் அதன் பராமரிப்பு, பழுது மற்றும் மறுசீரமைப்பு (MRO) நடவடிக்கைகளில் மேலும் 250 ஊழியர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல விமான இயந்திரம் மற்றும் உதிரிபாகம் தயாரிக்கும் GE ஏவியேஷன் 200 பணியிடங்களுக்கு வேலையாட்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் 2022ம் ஆண்டில் சிங்கப்பூரில் தங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகக் கூறின. அதே நேரத்தில் சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் (ST) இன்ஜினியரிங் அடுத்த ஆண்டுக்குள் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள், உற்பத்தி திட்டமிடுபவர்கள், பொருள் ஆய்வாளர்கள், விமானப் பொறியாளர்கள் மற்றும் தரவு ஆய்வாளர்கள் போன்ற முழுநேரப் பணிகளுக்காக 200 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூர், உலகில் உள்ள முன்னணி Aero Space MRO (Maintenance, Repair and Operations) மையங்களில் ஒன்றாகும், இது உலகளாவிய எம்ஆர்ஓ வெளியீட்டில் 10 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது மற்றும் 22,000-க்கும் மேற்பட்டவர்களைப் தங்களது பணியில் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொற்று பரவலால் வியத்தகு முறையில் விமான பயணங்கல் குறைந்தது. பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில்
விமானத்துறை தரைமட்டமாக்கப்பட்டதால், வர்த்தக விமானப் போக்குவரத்தை முக்கியமாக ஆதரிக்கும் தொழில்கள் சிங்கப்பூரில் கடும் பாதிப்பைச் சந்தித்தது. பிராட் அண்ட் விட்னி, ஏர்பஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தன.
ஆனால் “உலகளாவிய விமானத் துறை கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து தற்போது முன்னேறி வருகிறது. மேலும் 2023-க்குள் இந்த நிலை முழுமையாக சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் இது ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது என்று Association of Aerospace சங்கத்தின் தலைமை நிர்வாகி சியா கெங் யோக் CNA-விடம் கூறினார்.