சிங்கப்பூரில் உள்ள ஃபேர் பிரைஸ் கடையில் பொருட்களை வாங்க சென்ற பெண் அங்கு நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து டிக் டாக்கில் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் சிங்கப்பூரில் தற்பொழுது பேசுபொருள் ஆகி உள்ளது. சிங்கப்பூரில் உள்ள பாசரிஸ் பகுதியில் உள்ள கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுகள் இருக்கும் பகுதியில் எலி காணப்பட்டதை கண்டு அங்கு பொருட்களை வாங்க சென்ற பெண் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் அங்கு பதிவு செய்த வீடியோவை டிக் டாக்கில் ஷேர் செய்துள்ளார். உடனடியாக அந்த செய்தியை ஊழியர்களிடம் கூறிய பொழுது அவர்கள் அங்கிருந்த பிஸ்கட்டுகளை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து மேலும் கூறிய பெண் சிங்கப்பூரில் உள்ள இக்கடையில் அவர் 15 ஆண்டு காலமாக பொருட்கள் வாங்கி வருவதால் கடையின் மீது உள்ள நம்பிக்கை தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இச்செய்தியை அறிந்த நிர்வாகம் எலி இருந்த இடத்தில் முழுவதும் மருந்தடித்து சுத்தம் செய்துள்ளது.