TamilSaaga

“அவரை அப்பா மாதிரி நினைத்தேன்” : சிங்கப்பூரில் 78 முதியவர் செய்த அருவருக்கத்தக்க செயல் – உடைந்துபோன பணிப்பெண்

சிங்கப்பூரில் 78 வயது முதியவர் ஒருவர் தனது மகளின் பணிப்பெண் குளிப்பதை மூன்று நாட்களில் நான்கு முறை படம்பிடிப்பதற்காக கழிவறைக் கதவின் அடியில் Pinhole கேமராவைத் வைத்துள்ளார். இன்று வியாழன் (பிப்ரவரி 3) அன்று அந்த 78 வயது சிங்கப்பூர் நாட்டவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொண்ணூறுகளின் பிற்பகுதி வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தான் அந்த 78 வயது முதியவர் என்று அவரது வழக்கறிஞர் எஸ்.எஸ்.தில்லன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்க GAG ஆர்டர் உள்ளது என்பதால் அந்த முதியவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

“ஆவணங்களை” வீட்டிலேயே வைத்துவிட்டு சென்ற சிங்கப்பூர் பெண்” : ஜோகூர் ஆற்றில் பிணமாக மிதந்த மர்மம் – என்ன நடந்தது?

கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி மாலை 3.40 மணியளவில் பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண் ஒரு கழிப்பறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​கதவின் அடியில் 10 சென்டிமீட்டர் தொலைவில் கேபிளுடன் துளையிடப்பட்ட கேமராவைப் பார்த்ததாக நீதிமன்ற ஆவணங்களில் துணை அரசு வழக்கறிஞர் Yohanes Ng தெரிவித்தார். உடனடியாக தண்ணீரை நிறுத்திவிட்டு ஆடை அணிந்துக்கொண்டு அப்பெண் கழிப்பறையிலிருந்து வெளியே வந்தபோது, ​​குற்றவாளி அவரது படுக்கையறையில் பிரார்த்தனை செய்வதைக் கண்டுள்ளார்.

பின்னர் அந்த நபரை எதிர்கொண்டபோது, ​​அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். ஆனால், பணிப்பெண் குளித்துக் கொண்டிருந்த போது கழிவறைக் கதவுக்கு அடியில் கேமராவைச் செருகியதை அவர் தனது மகளிடம் பின்னர் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது முதலாளி மற்றும் குற்றவாளியுடன், அதே நாளில் அண்டையிலுள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றார். விசாரணையில், மார்ச் 8 முதல் 10 வரை, அந்த நபர் ஒரு Bore Scope கருவியை இயக்கி, பாதிக்கப்பட்ட பெண்ணின் அனுமதியின்றி நான்கு முறை கழிவறையில் அவர் குளிப்பதை வேண்டுமென்றே பார்த்துள்ளார்.

“பிப்ரவரி 18 வெளியாகும் சிங்கப்பூர் பட்ஜெட் 2022” – இரு முக்கிய கருத்துக்களை முன்வைத்த நிதியமைச்சர் வோங்

பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண், அவரை தனது தந்தையை போல பாவித்ததாகவும், ஆனால் அவருடைய செயல்களைப் பற்றி தெரிந்து கொண்டதன் விளைவாக, தனது நம்பிக்கைக்கு அவர் துரோகம் செய்துவிட்டார்” என்று பாதிக்கப்பட்ட பெண் தனது அறிக்கையில் கூறியுள்ளார் என்று டிபிபி என்ஜி கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts