TamilSaaga

‘சிங்கப்பூரில் கார் மோதி முதியவர் பலி’ – 73 வயது ஓட்டுநருக்கு 3 வார சிறை

சிங்கப்பூரில் சுமார் 73 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் ஒருவர் பாதசாரிகளை சரியாக கவனிக்காததன் விளைவாக அவர் ஓட்டிவந்த கார் அருகில் இருந்த முதியவர் மீது மோதியது. இதனால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோ ஆ சூனு என்ற அந்த 73 வயது ஓட்டுநருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி இரவு 8 மணியளவில், செரங்கூன் அவென்யூவில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த சோ, சாலை கடந்த ஒருவர் மீது எதிர்பாராத விதமாக மோதினர்.

ஓட்டுநர் சாலையை சரியாக கவனிக்காததால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காயமடைந்த அந்த முதியவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த மார்ச் 1ம் தேதி 2019ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநருக்கு மூன்று வார சிறை தண்டனை மற்றும் 5 ஆண்டு வாகனம் ஓட்ட தடைவிதிக்கப்பட வேண்டும் என்று அரசு வக்கீல் யீ ஜியா ரோங் நீதிமன்றத்தில் கூறினார். இதனை அடுத்து அந்த தண்டனையை நீதிபதி அவருக்கு வழங்கினார்.

Related posts