TamilSaaga

விபத்தில் சிக்கிய 7 மாத குழந்தை – சிங்கப்பூர் பான் தீவு நெடுஞ்சாலையில் பரிதாபம்

நேற்று (ஜீலை.17) சனிக்கிழமை சிங்கப்பூரில் உள்ள பான் தீவு நெடுஞ்சாலையில் திடீரென ஒரு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தானது நேற்று மதியம் 12.50 மணியளவில் பெண்டிமிர் சாலையிலிருந்து வெளியேறும் இடத்துக்கு முன்பாக நடந்துள்ளது. PIE உடன் துவாஸ் நோக்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஐந்து கார்கள் மற்றும் ஒரு லாரி இந்த விபத்தில் தொடர்புடையதாக கூறப்பட்டுள்ளது.

விபத்தில் 2 ஆண்கள் மற்றும் ஒரு 7 மாத பெண் குழந்தை சிக்கியுள்ளது. ஆண்கள் இருவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்கும், பெண் குழந்தை கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை கொண்டு செல்லும் போது அனைவருக்கும் சுய நினைவு இருந்ததாகவும் இதை பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts